Friday Jun 28, 2024

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ விழா: 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 7

மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலையில் பல்லக்கில் சாமி வீதியுலாவும், இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 18-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது .

விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்டம் விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு

வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று நிலையை அடையும். இரவு

தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Referencesசிங்கிரிக்குடி லட்சுமி நசிம்மர் கோவிலில் பிரமோற்சவ விழா: 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது | Commencement ceremony at Singrikudi Lakshmi Narasimha temple starts on 14th with flag hoisting. (maalaimalar.com)

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top