சமண பாதக்கோவில், இடையமடம்
முகவரி
சமண பாதக்கோவில், இடையமடம், முத்துக்காடு ரோடு, மருங்கூர், தொண்டி – 623 406.
இறைவன்
இறைவன்: பார்சுவநாதர்
அறிமுகம்
தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் இடையமடம் என்னும் கிராமத்தில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர்கள் 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமணக்கோவிலை கண்டுபிடித்துள்ளனர். சமணக்கோவிலில் இருந்து 50 அடி தூரத்தில் இக்கோயில் உள்ளது. நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட ஒரு ஜோடி பாதம் மேற்புறம் சிறிய விமானத்துடன் உள்ளது. இதன் இரு தூண்களிலும் வணங்கிய நிலையில் உள்ள இருவரின் சிற்பம் உள்ளது. இவர்களின் தலைக்குமேல் ஒரு குடை அமைப்பு உள்ளது. எனவே, இது சமணர்களால் அமைக்கப்பட்ட கோயில் என்பது உறுதியாகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்தது இருக்க வேண்டும். அது சமணர்களால் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் இருந்ததை சேதுபதி மன்னர்கள் காலத்தில் அப்பகுதி மக்கள் புனரமைத்து மடமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். கிழவன் சேதுபதி வழங்கிய செப்பேட்டில் எல்லை குறிப்பிடும்போது இடையமடம் குறிப்பிட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. சமணர்களால் அமைக்கப்பட்ட குகை பள்ளிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டாலும் கட்டுமான பள்ளியாக தென்மாவட்டங்களில் கண்டுபிடித்தது இதுவே முதல் முறை.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
தொல்பொருள் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
SP பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி