சன்னாசி பனங்குடி தாளரணேசுவரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
சன்னாசி பனங்குடி தாளரணேசுவரர் சிவன்கோயில்,
சன்னாசி, நாகை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் – 61102.
இறைவன்:
தாளரணேசுவரர்
அறிமுகம்:
நாகப்பட்டினம் வடக்கில் உள்ள மேலவாஞ்சூர்-திட்டச்சேரி சாலையில் 6 கிமீ தூரத்தில் பனங்குடி உள்ளது. இந்த பனங்குடியில் ஒரு சிவன் கோயிலும், அதன் மேற்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ள சன்னாசி பனங்குடி கிராமத்திலும் ஒரு சிவன் கோயில் உள்ளது. பல சதுரகிலோமீட்டர் பரப்பில் விளை நிலங்கள் நடுவில் இந்த ஊர் அமைந்துள்ளது. ஊரின் முகப்பில் பெரியதொரு குளத்தின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன் கோயில். ஆனால் கோயில் கோயிலாக இல்லை. பெரும்பகுதி இடிந்து சரிந்து கிடக்கிறது. கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம் என உள்ளது இறைவன் தாளரணேசுவரர் இறைவி- ? கதவு பூட்டியே கிடக்கிறது.
இறைவன் நடுத்தர அளவுடையவராக உள்ளார். அம்பிகை, விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன் பைரவர் ஆகியோர் உள்ளே முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். முக மண்டபத்தின் வெளியில் ஒரு உயர்ந்த மேடை மீது நந்தி பலிபீடம் உள்ளன. இறைவி தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார். தென்புறம் உள்ள விநாயகர் சிற்றாலயம் பெரிதும் இடிந்து கிடக்கிறது. ஒரு சிறிய நந்தி மட்டும் உள்ளது. கோஷ்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். வேறு தெய்வங்கள் இல்லை. தென்முகனும் பெரிதும் சிதைந்து காணப்படுகிறார். வடபுறம் உள்ள முருகன் சிற்றாலயம் சற்று பெரிதாகவே உள்ளது. சண்டேசர் சன்னதி சிறிதாக உள்ளது. சுற்று மதில் இடிந்து வாயில் வழி மட்டும் உள்ளது. இந்த தாளரணேசுவரர் கோவிலில் இருந்து 1992-ஆம் ஆண்டு காணாமல் போன பஞ்சலோக “ஆடிப்புர அம்மன்” சிலை மற்றும் விநாயகர் சிலைகளை 29 ஆண்டுகளுக்கு பின் கடந்த சில வாரங்களின் முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சன்னாசி பனங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி