Thursday Jul 04, 2024

சடையார்கோயில் வேணிநாதசுவாமி சிவன்கோயில்,தஞ்சாவூர்

முகவரி :

சடையார்கோயில் வேணிநாதசுவாமி சிவன்கோயில்,

சடையார்கோயில், ஒரத்தநாடு வட்டம்,

தஞ்சாவூர் மாவட்டம் – 614019.

இறைவன்:

வேணிநாதசுவாமி

அறிமுகம்:

ஒரு ஏக்கர் அளவுடைய பெரிய வளாகம் கொண்ட கோயில், சுற்று மதில் சுவர் கொண்டுள்ளது, கிழக்கில் மூன்று நிலை கோபுரம் உள்ளது, கோயில் எதிரில் பெரிய திடல் போன்ற பரப்பும் ஒரு குளமும் உள்ளது. பெரிய கதவினை திறந்து உள்ளே சென்றால் உயர்ந்து நிற்கும் செப்பு கொடிமரம், அதனடியில் பலிபீடமும், சிறிய கொடிமரவிநாயகர் மாடமும் உள்ளது கொடிமரத்தின் முகப்பில் நந்தி மண்டபம் நான்கு கருங்கல் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அழகிய சிறிய நந்தி. இறைவனுக்கு உயர்ந்த கருவறை அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்ததாக உள்ளது. சோழர் கால கட்டுமானம் தான். ஆனால் செங்கல் தளியாக அமைந்துள்ளது.

இறைவனின் எதிரில் உயர்ந்த ஒரு சிமென்ட் ஒட்டுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இறைவன் –வேணிநாதசுவாமி இறைவி  கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார், வடக்கில் துர்க்கை உள்ளார். சண்டேசர் சன்னதியும் உள்ளது. தென்மேற்கில் அழகிய உருளை வடிவ தூண்கள் கொண்ட விநாயகர் கோயில் உள்ளது, இது நாயக்கர் கால பாணியாகும் அடுத்து அர்த்தமண்டபத்துடன் முருகன் வள்ளி தெய்வானை சிற்றாலயம் அமைந்துள்ளது. வடமேற்கில் ஒரு பழமையான மண்டபத்தில் ஒரு லிங்கமும் அருகில் உண்ணாமுலை அம்மன் என பெயரிடப்பட்டுள்ள அம்பிகை உள்ளார், அருகில் பெருமாள் மூர்த்தம், இவை இரண்டையும் அருகருகே வைத்தது அறியாமை தான். அடுத்து கஜலட்சுமி உள்ளார்.

சிதைவடைந்த ஒரு பழைய கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் புரிகிறது. வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் நவகிரகங்கள் அஷ்ட திக்கையும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. பைரவர் அருகில் ஒரு சிறிய சிலை உள்ளது என்னவென அறியமுடியவில்லை.. சரி அம்மன் கோயில் எங்கே என்கிறீர்களா? கோயிலுக்கு வெளியில் தெற்கு நோக்கியதாக உள்ளது. அதுபோல் இடதுபுறம் ஒரு விநாயகர் கோயிலும் உள்ளது. உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் கோயிலுக்கு வந்து செல்வதாக தெரியவில்லை, கோயில் போதிய பராமரிப்பின்றி உள்ளது பூஜையும் ஒரு கால பூஜையாகவே உள்ளது. ஆனால் இக்கோயில் பெயரில் இ.சம.அற.துறையில் 70 புலஎண்கள் கணக்கில் உள்ளன.

காலம்

1300 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சடையார்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top