Tuesday Apr 01, 2025

சங்ககிரி வசந்த வல்லப ராஜ பெருமாள் திருக்கோயில், சேலம்

முகவரி :

சங்ககிரி வசந்த வல்லப ராஜ பெருமாள் கோயில்.

வி.என். பாளையம். சங்ககிரி வட்டம்,

சேலம் மாவட்டம் – 637301.

இறைவன்:

வசந்த வல்லப ராஜ பெருமாள்

இறைவி:

வசந்தவல்லி மகாலட்சுமி

அறிமுகம்:

         சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வி.என். பாளையத்தில் ஸ்ரீ வசந்தவல்லி மகாலட்சுமி சமேத வசந்த வல்லப ராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்ககிரி பழைய பஸ் நிலையத்திருந்து 1 கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளது. இங்கு தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர். தங்களின் விருப்பம் நிறைவேற இவருக்கு தபால் மூலம் கோரிக்கைகளை பக்தர்கள் அனுப்புகின்றனர்.  

புராண முக்கியத்துவம் :

சீதையை கடத்திச் சென்றான் ராவணன். அப்போது ராமர் உள்ளிட்ட அனைவரும் சீதையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தவம் செய்தால் மட்டுமே சீதையை மீட்க முடியும் என நினைத்தார் அஞ்சநேயர். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் தான் சங்ககிரி மலை. இங்கு தான் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். தவம் செய்யும் நிலையில் ஒருவரிடமும் கோரிக்கையைச் சொல்ல முடியாது. அதற்காக முன்பு ஓலைச்சுவடியில் கோரிக்கைகளை எழுதி வைத்தனர். தற்போது அது தபாலாக மாறி விட்டது. இதனால்  தபால் ஆஞ்சநேயர் எனப் பெயர் பெற்றார். மலைமீது இருந்த ஆஞ்சநேயர் 17ம் நூற்றாண்டில் அடிவாரத்தில் இருந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டார்.

நம்பிக்கைகள்:

வேண்டுதல்களை எழுதி சன்னதியில் கோரிக்கையாக வைக்கலாம். கோயிலுக்கு வர முடியாதவர்கள், ‘தபால் ஆஞ்சநேயர் அரசு மருத்துவமனி எதிரே வி.என்.பாளையம் அஞ்சல் சங்ககிரி எனும் முகவரிக்கு கடிதமாக எழுதி அனுப்பலாம். ஞாயிறன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனுப்பிய கடிதங்களை பிரித்து பூஜை செய்கின்றனர். கோரிக்கை நிறைவேறியதும் துளசிமாலை, வெண்ணெய் சாத்தியும், நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர்.

காலம்

17 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வி.என். பாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top