கோமல் (தம்பிரான் கோயில்) சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கோமல் – தம்பிரான் கோயில்,
கோமல், குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609805.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கோமளிய ஜோதியாக இறைவன் காட்சியளித்ததால் கோமல் என இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. கிருபாகூபேஸ்வரர், அமிர்தகடேஸ்வரர் மூன்றாவதாக அழகிய நாதர் கோயில் இதுவல்லாமல் கோமல் ஊரின் தெற்கு பகுதியில் கங்காதரபுரம் செல்லும் சாலையில் சாலையோரத்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் அருகில் சிறிய தகர கொட்டகையில் உள்ளார் இறைவன். ஆவுடையாரின் மேல் பாகம் இன்றி அடிப்பகுதியும், லிங்க பாணமும் கொண்டு இறைவன் விளங்குகிறார். தம்பிரான் கோயில் என அழைக்கின்றனர் இவ்வூர் மக்கள். இளைய மடாதிபதியை தான் தம்பிரான் என்பர் ஆனால் இதற்க்கான பெயர் காரணம் அறியமுடியவில்லை.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோமல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி