கோனாதி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு
முகவரி
கோனாதி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிவன்கோயில், கோனாதி, செங்கல்பட்டு தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம்- 603203
இறைவன்
இறைவன்: ஸ்ரீ பசுபதீஸ்வரர்
அறிமுகம்
தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து பொத்தேரிக்கு மேற்கில் சுமார் 1 .கி.மி. தொலைவில் அமைந்துள்ளது கோனாதி என்ற கிராமம். இக்கிராமத்தின் எல்லையில் உள்ளது இந்த சிவன் .கோயில். ஒரு கீற்று .கொட்டகையில் அமந்துள்ளார் ஈசன். கால மாற்றத்தின் காரணமாக கோவில் முற்றிலுமாக சிதிலமாகி தற்போது ஈசன் ஒலை கொட்டைகையில் காட்சியளிக்கிறார். இறைவனை ஸ்ரீ பசுபதீஸ்வரர் என்று அழைக்கிறார்கள். அம்பாள் சிலை இல்லை. இங்குள்ள மூர்த்தங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. சிவன் நந்தியை தவிர வெறேந்த தெய்வங்களும் இல்லை. நந்தி ஓலைகீற்றுக்கு வெளியே உள்ளது. ஊர் மக்கள் யாரும் இக்கோவிலுக்கு வருவதாக தெரிவதில்லை. அருகிலேயே திருக்குளம் காணப்படுகிறது.. பிரதோஷம் அன்று மட்டும் இங்கு பூஜை. தொடர்புக்கு திரு சசிகுமார்-9840056301, திரு -செந்தில்-9677234323.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பொத்தேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காட்டாங்கொளத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை