கொப்பூர் சிவன் கோயில்
முகவரி
கொப்பூர் சிவன் கோயில், கொப்பூர் – 602 025
இறைவன்
சிவன்
அறிமுகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 108 சிவாலயங்களை கொண்ட அதிசய கிராமமாக திகழ்கிறது கொப்பூர் கிராமம். திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ளது இந்த கிராமம். 250 ஆண்டுகளுக்கு முன்பு திருக்காப்பபூர் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமம் நாளடைவில் கொப்பூர் என அழைக்கப்பட்டு வருகிறது. கொப்பூர் பகுதியில் சிவாலயங்கள் இருந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, வீடுகளாக மாற்றி விட்டனர். மேலும், 108 சிவாலயங்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.தற்போது, அதிகபட்சமாக, 10 சிவாலயங்கள் தான் பார்வைக்கு தெரியும் வகையில் உள்ளதாகவும், மீதமுள்ள சிவாலயங்கள், புதர் மண்டி இருப்பதால், அவை இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டதாகவும், அப்பகுதியினர் தெரிவித்தனர்.
புராண முக்கியத்துவம்
இந்த கிராமம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜ சுவாமிகள் அதரிப்பதற்கு முன், இந்தப் பகுதியில் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் தான் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர். இப்பகுதியில் 108 சிவலிங்கம் நந்திகளுடன் கூடிய சிவாலயங்கள் உள்ளன. 108 சிவாலயங்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. வேறு எந்த பகுதியிலும் இந்த சிறப்பு இல்லை. ஒவ்வொரு கோவிலுக்கு முன் ஒரு குளம் உண்டு. இந்த குளத்து நீரைக் கொண்டு தினமும் சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் அபிஷேக பூஜையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த பின் இப்பகுதியில் சைவ சமயத்தில் இருந்தவர்கள் வைணவ மதத்திற்கு மாற ஆரம்பித்தன. இதன் தொடர்ச்சியாக 108 சிவாலயங்களில் பூஜைகள் நடத்த முடியாமல் பெரும்பாலனவை சிதிலடைந்தன. சிவ பக்தர்கள் 108 சிவாலயங்களை தேடி பல ஊர்களுக்கு சுற்றி வரும் வேளையில் 108 சிவாலயங்கள் ஒரே ஊரில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. எனவே 108 சிவாலயங்களையும் கண்டுபிடித்து அவற்றை சீரமைத்து தினமும் மக்கள் வழிபடும் வகையில் கோவில் அமைய இறைவனை பிராத்திப்போம்.
சிறப்பு அம்சங்கள்
108 சிவாலயங்கள் ஒரே ஊரில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடம்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை