கொடுங்கல்லூர் மகோதை மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
முகவரி
கொடுங்கல்லூர் மகோதை மகாதேவர் திருக்கோயில், கொடுங்கல்லூர், திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680664.
இறைவன்
இறைவன்: மகோதை மகாதேவர்
அறிமுகம்
கொடுங்கல்லூர் சிவன் கோயில் கேரள மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். திருச்சூரிலிருந்து 40 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இங்குள்ள இறைவன் மகோதை மகாதேவர் என்றழைக்கப்படுகிறார். இங்கு இறைவியின் சன்னதியின் கிழக்கில் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி கோயில் உள்ளது. “கொடுங்கோளூர்” சேரர் தலைநகரமாக விளங்கியது. இது “மகோதை” எனப்படும். இதற்குப் பக்கத்தில் ‘திருவஞ்சைக்களம்’ உள்ளது. இரண்டும் தனித்தனித் தலங்கள்; இரண்டிலும் பெரிய சிவாலயங்கள் உள்ளன. இத்தலம் அப்பர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடுங்கல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
எர்ணாகுளம்
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி