குமரகிரி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சேலம்.
முகவரி
குமரகிரி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சேலம்.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ தண்டாயுதபாணி
அறிமுகம்
ஒரு மாம்பழத்திற்காக அம்மையப்பனிடம் கோவித்துக்கொண்டு தன் மயில் வாகனத்தில் பழநிமலை செல்லும் வழியில் இந்த மலையில் சற்று நேரம் தங்கிச்சென்றாராம் ‘எனை ஆளும் ஆண்டவன்’ எம்பெருமான் முருகன். குமரன் தங்கிச் சென்ற மலை என்பதால் “குமரகிரி” என்று அழைப்படலாயிற்று. இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டாயுதபாணியாக அருட்காட்சியளிக்கிறார். மாம்பழம்தான் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ( சேலத்து மாம்பழம் சிறப்புற்று இருக்க காரணம் தெரிந்து கொண்டீர்களா.. சுமார் 700-படிக்கட்டுகள் கொண்ட இம்மலைக் குன்றுக்கு, வாகனங்களில் செல்ல மலைப்பாதையும் உள்ளது. ஆயுள் விருத்தியாக, தடைபட்ட திருமணம், குழந்தை பேறு மற்றும் செய்யும் தொழில் சிறப்புக்கும் படி பூஜையும், திரிசதை அர்ச்சனையும் இங்கு செய்வது விசேஷம்.
புராண முக்கியத்துவம்
நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்குத் தரவேண்டு மென கேட்டுட் , பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாக சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டுட் சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, “தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்’ என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்டட் பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்கு சென்றார். பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைட்க் கொடுத்துத் , அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டுட்ம்படி கூறினார். அத்திருவோட்டிட்ல் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டிட்னார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழம் நைவேத்யம் படைத்துத் வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை. இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழம் உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்துத் நிலவுகிறது. எனவே பக்தர்கர்ள் இவரை, “மாம்பழம் முருகன்’ என்றும் அழைக்கிறார்கர்ள.
நம்பிக்கைகள்
தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்துத் வணங்கிட புத்திரபாக்கியம் கிட்டுட்ம், தடைபட்டட் திருமணங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பால்குடம், காவடி எடுத்தல், முடி இறக்குதல், சேவல்காணிக்கை செலுத்துத் தல் என நேர்த்ர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
இத்தலத்தில், கையில் தண்டத்துத்டன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். இங்கு முருகனுக்கு நைவேத்யமாக சுத்தான்னம், மாம்பழம் படைத்துத் வழிபடுகின்றனர். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. பிரகாரத்தில் துர்க்ர்க்கை , நவக்கிரகம், ஐயப்பன் சன்னதிகள் உள்ளது.
திருவிழாக்கள்
கந்த சஷ்டி, தை ப்பூசம், பங்குனி உத்திரம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குமரகிரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்புத்தூர், திருச்சி