கீவளுர் அனந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கீவளுர் அனந்தீஸ்வரர் திருக்கோயில்,
கீவளுர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611104.
இறைவன்:
அனந்தீஸ்வரர்
இறைவி:
அபிராமி
அறிமுகம்:
திருவாரூரின் கிழக்கு பகுதியில் உள்ளதால் கீழ் வேளூர் என பெயர் பெற்றது. தற்போது கீவளூர் எனப்படுகிறது. கேடிலியப்பர் திருக்கோயிலின் நேர் மேற்கில் அமைந்துள்ளது தான் இந்த அனந்தீஸ்வரர் திருக்கோயில். கேடிலியப்பர் கோயிலின் மேற்கு கோபுர வாயிலின் நேர் மேற்கில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது சிறப்பு. பிரதான சாலையில் மேலஅக்ரஹாரம் என ஒரு போர்டு இருக்கும், அந்த தெருவின் வழி சென்றால் ஒரு பெரிய குளத்தின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கியதாக கோயில் அமைந்துள்ளது.
ஒரு சாபத்தின் காரணமாக இந்த தலம் ஆதிசேஷன் வழிபட்டதலம் ஆகும். ஆதிசேஷனுக்கு இன்னொரு பெயர் அனந்தன் என்பது . அதனால் இந்த தல இறைவனின் பெயர் அனந்தீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார். இங்கு வடக்கு நோக்கிய சிறிய சன்னதியில் ஆதிசேஷன் உள்ளார். இறைவன்-அனந்தீஸ்வரர் இறைவி-அபிராமி 40 வருட காலமாக பழுதடைந்து கிடந்த கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெறுகிறது. மதில் சுவர்கள் இடிந்து விட்டன முகப்பு வாயில் மட்டும் உள்ளது அதில் பணிகள் நடக்கின்றன.
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அழகிய லிங்கமூர்த்தி. இறைவி தெற்கு நோக்கிய கருவறையில் உள்ளார். அம்பிகைக்கு சற்று நேரெதிரில் முருகன் வடக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இது பிற தலங்களில் காண கிடைக்காத சன்னதியாகும். இறைவனின் நேர் எதிரில் நந்தியும் பலிபீடமும் சிறிய விநாயகரும் உள்ளனர். கருவறை கோட்டங்களில் தென்முகன் துர்க்கை உள்ளனர். தென்முகனின் நேர் எதிரில் ஆதிசேஷன் உள்ளார். வினாயகருக்கு புதிய சிற்றாலயம் அமைக்கப்படுகிறது. அதுபோல் மகாலட்சுமிக்கும் புதிய சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளது அம்பிகை சன்னதியை ஒட்டி நவகிரகமும் பைரவர் சிலைகளுமுள்ளன. தேவர், ரிஷி, முனிவர், சித்தர், அசுரர் போன்றவர்கள் பூசித்த தலங்கள் போல நாகர்களும் பூமிக்கு வந்து பல ஆலயங்களில் சிவபெருமானை பூஜித்து, வணங்கி வந்துள்ளார்கள். ஒருவருக்கு ஏற்படும் நாக தோஷம் போன்றவற்றை விலக்கிக் கொள்ள இந்த திருத்தலங்களில் சென்று வழிபடுவதன் மூலம் அந்த தோஷங்கள் அனைத்துமே நீங்கும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீவளுர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி