கீழ்மாவிலங்கை விஷ்னு குடைவரைக்கோயில், விழுப்புரம்
முகவரி
கீழ்மாவிலங்கை விஷ்னு குடைவரைக்கோயில், கீழ்மாவிலங்கை, விழுப்புரம் மாவட்டம்- 604207.
இறைவன்
இறைவன்: விஷ்னு
அறிமுகம்
செய்யாரில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் திண்டிவனத்திற்கு முன் சேவூர் அடுத்து கீழ்மாவிலங்கை எனப்படும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள பாறை ஒன்றில் விஷ்ணுவுக்காக இக்குடைவரை குடையப்பட்டுள்ளது. “முகரப் பெருமாள் கோயில்” என்ற பெயரும் இதற்கு உண்டு. இது மிகச் சிறிய குடைவரை. இதுவரை அறியப்பட்டவற்றுள் தொண்டை மண்டலத்தில் உள்ள மிகச் சிறிய குடைவரை இது என்று கூறப்படுகின்றது. இக்குடைவரையில் தூண்கள் எதுவும் இல்லை. இதன் பின் சுவரில் நிற்கும் நிலையில் விஷ்ணுவின் புடைப்புச் சிற்பம் உள்ளது. முகப்பில் குடைவின் இரு பக்கங்களிலும் வாயிற்காவலர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இக் குடைவரையின் வாயிலுக்கு அருகில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இது மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது என்ற கருத்து உள்ளது. அதேவேளை, இங்குள்ள சிற்பத்தின் தன்மையைக் கொண்டு இது இராஜசிம்மன் காலத்துக்கும், நந்திவர்மன் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.இந்த குடைவரை இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது..
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழ்மாவிலங்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்செரி