கீழவெண்மணி தர்மபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கீழவெண்மணி தர்மபுரீஸ்வரர் சிவன்கோயில்,
கீழவெண்மணி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.
இறைவன்:
தர்மபுரீஸ்வரர்
இறைவி:
மங்களாம்பிகை
அறிமுகம்:
கீழவெண்மணி கீழ்வேளூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். கீவளூர் – சாட்டியக்குடி சாலையில் 7 கிமீ தூரத்தில் உள்ளது இந்த கிராமம். நான்கைந்து குளங்களும், இரண்டு தெருக்களும் உள்ள சிறிய கிராமம். ஒரு குளத்தின் மேல் கரையில் சிறிய சிவன்கோயில். கிழக்கு நோக்கிய இறைவன் தர்மபுரீஸ்வரர், இறைவி மங்களாம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். முகப்பில் சிறிய மண்டபம், அதில் நந்தி உள்ளார். தென்மேற்கில் சிறியதாய் விநாயகர் சிற்றாலயம், விநாயகருக்கு வேண்டுதலாக தேங்காய் மாலையிட்டுள்ளனர். வடமேற்கிலும் ஒரு சிற்றாலயம் உள்ளது அதிலும் விநாயகர் உள்ளார். அது ஏனென்று தெரியவில்லை. சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கிய பைரவர், மேற்கு நோக்கிய சனி, சந்திரன், சூரியன் உள்ளனர். ஒரு நாகரும் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன், துர்க்கை மட்டும் உள்ளார்கள். பழம்கோயிலின் மீதம் இது என தோன்றுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழவெண்மணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி