கீழகொற்கை நாகலிங்கேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கீழகொற்கை நாகலிங்கேஸ்வரர் சிவன்கோயில்,
கீழகொற்கை, கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612401.
இறைவன்:
நாகலிங்கேஸ்வரர்
அறிமுகம்:
கும்பகோணத்தை ஒட்டியே அமைந்துள்ளது கீழகொற்கை. இவ்வூருக்கு அண்ணலக்ரஹாரம் வழி வரலாம், அல்லது மருதாநல்லூர் கொற்கை கீழகொற்கை என வரலாம். கீழகொற்கை – கும்பகோணம் சாலையில் உள்ளது இந்த இயற்கை சிவாலயம். உயர்ந்து பரந்து நிற்கும் பெரிய நாகலிங்க மரத்தின் கீழ் ஏகாந்தமாக அமர்ந்துள்ளார் இறைவன். கிழக்கு நோக்கிய இறைவன் நாகலிங்கேஸ்வரர் தெற்கு நோக்கிய சிற்றாலயத்தில் அபிராமி உள்ளார். இறைவன் எதிரில் நந்தியும் சிறிய கொடிமரம் ஒன்றும் உள்ளது. இறைவனின் ஒரு புறம் விநாயகரும் மறுபுறம் ஒரு முனிவர் கையில் உத்திராக்ஷ மாலையுடன் உள்ளார். வடபுறம் தெற்கு நோக்கி ஒரே வரிசையாக நவகிரகங்கள் உள்ளன. ஒரு மேடையில் நாகர் சிலைகள் உள்ளன. மரம் நிறைய நாகலிங்க பூக்கள் நிறைந்துள்ளன.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழகொற்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி