கீழகாவதுகுடி ராமலிங்கேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கீழகாவதுகுடி ராமலிங்கேஸ்வரர் சிவன்கோயில்,
கீழகாவதுகுடி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
ராமலிங்கேஸ்வரர்
இறைவி:
பர்வதவர்த்தினி
அறிமுகம்:
திருவாரூரின் வடக்கில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது கீழகாவதுகுடி. இங்கு சாலை ஓரத்தில் ஒரு சிறிய கிழக்கு நோக்கிய சிவன்கோயில் ஒன்றுள்ளது. கோயில் முற்றிலும் சிதைந்துபோனது.. அதில் இருந்த லிங்கமூர்த்தி, அம்பிகை மற்றும் பிற மூர்த்திகளை எடுத்து ஓர் தகர கொட்டகை அமைத்து வழிபாட்டிடம் அமைத்து உள்ளனர். இறைவன் ராமலிங்கேஸ்வரர் இறைவி பர்வதவர்த்தினி இராமபிரான் கோடியக்கரை நோக்கி பயணித்த போது இவ்விடத்தில் நின்று இத்தல இறைவனை பூஜை செய்ததால் இவரை ராமலிங்கேஸ்வரர் என அழைக்கின்றனர். ராமபிரான் நின்ற இடத்தில் அவரது பாதங்கள் இரண்டு இறைவனை நோக்கியவாறு வைக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய கொட்டகையில் இரண்டு லிங்க மூர்த்திகள் அருகருகே வைக்கப்பட்டு உள்ளன. இரண்டு நந்திகளும் உள்ளன. அம்பிகை தெற்கு நோக்கிய வண்ணம் வைக்கப்பட்டு உள்ளார். இறைவன் எதிரில் ராமர் பாதம் உள்ளது. அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். இது இந்திரா காலனி குடியிருப்பு பகுதி என அழைக்கப்படுகிறது. அனைத்து மாத பட்ச விசேஷங்களும் நித்ய பூஜைகளும் குறைவின்றி மக்கள் செய்துவருகின்றனர். விரைவில் அழகியதொரு கோயில் அமைந்திட எல்லோரும் இயன்ற உதவிகளை நல்கிட அன்புடன் வேண்டுகிறேன்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழகாவதுகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி