காவலேதுர்கா ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், கர்நாடகா
முகவரி
காவலேதுர்கா ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், காவலேதுர்கா கோட்டை, கர்நாடகா – 577448
இறைவன்
இறைவன்: ஸ்ரீ காசி விஸ்வநாதர்
அறிமுகம்
காவுலேதுர்கா கோட்டை ஷிமோகாவின் தீர்த்தஹள்ளியில் இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ளது. இது 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இது கேலடி இராஜ்ஜியத்தின் நான்காவது மற்றும் கடைசி தலைநகரம். இது காசி விஸ்வநாதர் கோவிலின் இடிபாடுகளை கொண்டுள்ளது. காவலேதுர்கா கோட்டையின் நான்காவது வாயிலில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அதன் மகத்துவத்தை இன்னும் தக்கவைத்துள்ள ஏராளமான இடிபாடுகளைக் கொண்ட பரந்த மைதானத்தில் உள்ளது. கேலடி மன்னர்கள் காலத்தில், கோவில் கட்டிடக்கலையின் சிறப்பைக் காட்டியுள்ளது. கோவிலுக்குச் செல்லும் அதன் முற்றத்தில் இரண்டு கோபுரத் தூண்கள் செங்குத்தாக நிற்கின்றன. அலங்காரத்தில் எளிமையை காட்டும் இந்த கோவிலில், ஆயுதமேந்திய வீரர்கள், மூன்று தலைகள் கொண்ட பறவைகள், பாம்புகள், சூரியன், சந்திரன் மற்றும் யானைகள் வெளிப்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலை உச்சியில் இரண்டு பெரிய தூண்களுடன் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. கெலாடி பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கோட்டையின் பல்வேறு நிலைகளில் நீல-பச்சை நீரால் நிரப்பப்பட்ட நிறைய குளங்களை காணலாம். குளங்கள் பழங்காலத்தில் தண்ணீரை சேமிக்கப் பயன்படுத்தப்பட்டன. இது தவிர, பெரிய அரண்மனையின் இடிபாடுகளையும் இங்கே காணலாம். அரண்மனையின் எச்சங்களை நூற்றுக்கணக்கான கல் தூண்களின் வடிவத்தில் பெரிய பரப்பளவில் பரவலாக உள்ளது. மலையின் உச்சியில் மற்றொரு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கோவில் உள்ளது, அதுவும் சிதிலமடைந்துள்ளது.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காவலேதுர்கா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஷிமோகா நகரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்