கார்ஹி பாதவளி கோட்டை சிவன் கோவில் , மிட்டோலி
முகவரி
கார்ஹி பாதவளி கோட்டை சிவன் கோவில் மிட்டோலி, மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம் – 476 444
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
குவாலியருக்கு வடக்கே 43 கி.மீ தொலைவிலும், மத்திய பிரதேசத்தில் மொரேனாவிலிருந்து 18 கிமீ கிழக்கிலும் உள்ள சிறிய அமைதியான கிராமமான மிட்டோலியில் அமைந்துள்ளது. யோகினி கோவிலுக்கும் இதற்கும் இடைப்பட்ட தூரம் 3 கிமீ. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது பதினெட்டாம் நூற்றாண்டுடில் கட்டப்பட்ட கோட்டை பிரம்மாண்டமாக உள்ளது. அதில் உள்ள கோவிலும் அதே நூற்றாண்டாக இருக்கும் என்றும் பெரிதளவில் கட்டுமான பணி இருக்காது என்று என்னினால் அது தவறு. ஏனேன்றால் முக மண்டபம் போன்ற அமைப்பின் அனைத்து தூண்களும் வார்த்தெடுக்கப்பட்ட சிற்பங்களாய் உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பிகள் அவ்வளவு அழகாக செதுக்கி உள்ளனர். முப்பரிமாண காட்சி போல திரும்புறப் பக்கத்தில் எல்லாம் சிற்பங்கள் உள்ளன. சிவன் கோவிலாக இருந்தாலும் விஷ்ணுவின் அவதாரங்களும், பிரம்மாவும், கிருஷ்ணனும், சிற்பங்களும் இக்கோவிலில் உள்ளன. அந்த சின்ன மண்டபத்திற்க்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கிறது. இங்க எந்தவிதமான கல்வெட்டு தகவல்களும் இல்லை. இக்கோவிலோட காலத்தை வைத்து கோவிலோட கட்டுமானத்த வைத்து இக்கோவில் பத்தாம்-பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள். அந்த காலகட்டத்தில் இங்க ஆட்சி செய்தது கச்சப்ப ஃகடா மன்னர்கள் தான். அதற்கு முன் பிரதிகாரா மற்றும் சண்டேலா அரசுகளின் கீழ் இருந்துருக்கிற இந்த பகுதி.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மிட்டோலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குவாலியர்
அருகிலுள்ள விமான நிலையம்
குவாலியர்