காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் திருக்கோயில்

முகவரி :
அருள்மிகு கருக்கினில் அமர்ந்தவள் திருக்கோயில்,
காஞ்சிபுரம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631501.
இறைவி:
கருக்கினில் அமர்ந்தவள்
அறிமுகம்:
அழகான கோபுரத்துடன் கூடிய கோயில். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பல பல சன்னதிகள் உள்ளன. துர்கை அம்மன் , யோக துர்க்கை, சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, என்று மூன்று வடிவங்களாகத் தரிசனம் அளிக்கிறார்.
சர்ப்ப தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காகப் பலரும் இங்கே வந்து பிரார்த்தனை செய்கிறார்கள் பக்தர்கள். இங்குள்ள விசேஷ சன்னிதிகளில் ஜேஷ்டாதேவி சன்னதியும் ஒன்று. இந்த அம்பிகைக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி, தேங்காய் பழம் சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடுகிறது என்பது பக்தர்களின் அனுபவம். பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் பிள்ளையார் பாளையம் என்ற இடத்தில் கோயில் உள்ளது.
காமராஜர் சாலையில் உள்ள மேட்டுத் தெரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோயில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது.
பேருந்து நிலையம் முன்பு ஏராளமான ஆட்டோக்கள் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
ரம்பன் என்னும் அசுரன் ஒரு எருமை மாட்டின் மூலமாக பெற்ற பிள்ளை மகிஷன். எருமை முகம் கொண்டவன் என்பதால் மகிஷன் என பெயர் பெற்றான். மகாபலசாலியான இவன், தேவர்களையும், முனிவர்களையும் யாகம் செய்ய விடாமல் துன்புறுத்தி வந்தான். ரம்பனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். உடனே கலைமகள், திருமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் சக்திகளும் ஒன்றிணைந்து ஒரே வடிவில் நின்றனர். துர்க்கை என்ற பெயர் கொண்டு திரிசூலம் ஏந்தி துர்க்கையாக சிங்க வாகனத்தின் மீதேறிச் சென்று, அசுரனைச் சூலத்தால் அழித்தாள். மகிஷனைக் கொன்றதால் மகிஷாசுரமர்த்தினி என்றும் பெயர் பெற்றாள். அந்த மகிஷாசுரமர்த்தினியே, காஞ்சிபுரம் தெற்கு பட்டடை கிராமத்தில் கருக்கினில் அமர்ந்தவள் என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டிருக்கிறாள்.
நம்பிக்கைகள்:
நாகதோஷ நிவர்த்தி பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
பெயர்க்காரணம்: பனைமரத்திற்கு கருக்கு என்றொரு பெயருண்டு. நடு இரவு நேரத்தையும் கருக்கு என்றே குறிப்பிடுவர். ஒரு இரவு வேளையில், இங்குள்ள பனைமரத்தின் கீழ் அமர்ந்து மகிஷனை அம்பிகை சம்ஹாரம் செய்தாள். அதனால், கருக்கினில் அமர்ந்தவள் என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது. வடக்கு நோக்கி அமர்ந்த இவள், வலதுபாதத்தை அசுரனின் தலைமீதும், இடதுபாதத்தை அவன் கால்மீதும் வைத்திருக்கிறாள். தலையை இடதுபுறம் சாய்த்த இவளது கையில் திரிசூலம் உள்ளது. வெள்ளியன்று இவளை தரிசித்தால் எண்ணிய எண்ணம் ஈடேறும். தடைபட்ட திருமணம் நடந்தேறும். நோய்நொடி விலகி ஆரோக்கியம் சீராகும். வடக்கு நோக்கி அமர்ந்த சக்திகள், காவல் தெய்வங்களாகக் கருதப்படும். அவ்வகையில், மாங்கல்யம், உத்தியோகம், தொழில் ஆகியவற்றிகு பாதுகாப்பு அளிப்பவளாக விளங்குகிறாள்.
கோயில் நுழைவு வாயிலிலுள்ள இலுப்பை மரத்தின் அடியில் நவகன்னியர் சந்நிதியும், அதன்முன் தெப்பக்குளமும் உள்ளன. ராஜகோபுரத்தைக் கடந்ததும் காவல்தெய்வமான அண்ணமார் சந்நிதியும், பாம்புப் புற்றும் உள்ளது. மூலவருக்கு முன்பகுதியில் புத்தருக்கு இரு சிலைகளும், அதற்கு நடுவில் வேதாளம் சிலையும் உள்ளது. அம்பிகைக்கு வேதம் உபதேசித்த சிவன் வேதபுரீஸ்வரராக தனி சந்நிதியில் இருக்கிறார். விநாயகர், முருகன், துர்க்கை சந்நிதிகளும் உள்ளன.
திருவிழாக்கள்:
பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேட்டுத் தெரு
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை