கவர்தா இஸ்தாலிக் கோவில், சத்தீஸ்கர்
முகவரி
கவர்தா இஸ்தாலிக் கோவில், கவர்தா, கபிர்தாம் மாவட்டம் சத்தீஸ்கர் – 491995
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
செளரகானில் உள்ள இந்த பழைய கோவில் சத்தீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தில் உள்ள கவர்தாவிலிருந்து 18 கிமீ தொலைவிலும், இராய்பூரிலிருந்து 125 கிமீ தொலைவிலும் உள்ளது. இஸ்தாலிக் கோவில், எரிந்த களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட கோவில், முக்கியமாக போரம்டியோ கோவிலுடன் இணைந்துள்ளது. 2 ஆம் நூற்றாண்டுக்கும் 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்ட முதல் கோயில் இதுவாகும். இந்த கோவில், பாழடைந்த நிலையில் உள்ளது. நுழைவு மண்டபம் இல்லாமல் கருவறை மட்டுமே உள்ளது. கருவறைக்கு மேலே உள்ள கோபுரம் அதன் பாதி உயரத்திற்கு மட்டுமே உள்ளது. “அல்லிண்டா” என்று அழைக்கப்படும் சுவர் இந்த கோவிலின் வெளியே உள்ளது. கருவறையில் காணப்படும் மற்ற கட்டமைப்பு அம்சங்கள் சில செதுக்கப்பட்ட தூண்கள். உமா மகேஸ்வர் மற்றும் இராஜா மற்றும் இராணி ஆகியோரின் உருவங்களுடன் செதுக்கப்பட்ட சிவலிங்கமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
காலம்
2-3 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கவர்தா
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராய்ப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
இராய்ப்பூர்