Tuesday Jan 07, 2025

கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ ஆதி வராகப்பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ ஆதி வராகப்பெருமாள் திருக்கோயில்

கல்லிடைக்குறிச்சி,

திருநெல்வேலி மாவட்டம்,

தமிழ்நாடு– 627 416

தொலைபேசி: +91- 4634 – 250 302, 94431 59402.

இறைவன்:

ஸ்ரீ ஆதி வராகப்பெருமாள் 

இறைவி:

பூமாதேவி

அறிமுகம்:

                   ஆதி வராகர் கோவில் கல்லிடைக்குறிச்சி கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கோவில் ஆகும். கிழக்கு நோக்கிய கோவிலில் கோபுரம் இல்லை, ஆனால் கொடிமரம், பலி பீடம் மற்றும் கருடன் பிரதான சன்னதியை நோக்கி உள்ளது. இக்கோயில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டது. இந்த அமைப்பு கிபி 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கிழக்கு நோக்கிய கருவறையில் இடது மடியில் லட்சுமியைத் தாங்கியபடி அமர்ந்த கோலத்தில் வராகர் சிலை உள்ளது. லட்சுமிபதியின் உற்சவ சிலைகள் மற்றும் அவரது இரு துணைவிகளும் கருவறையில் காணப்படுகின்றனர். பொதுவாக பூமா தேவியே வராகத்துடன் காணப்படுகிறாள். இக்கோயிலில் இது தனிச்சிறப்பு வாய்ந்தது.

புராண முக்கியத்துவம் :

நம்பிக்கைகள்:

குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க விரும்பினான். எனவே, வராகப்பெருமாளுக்கு ஒரு சிலை வடித்து, தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த சுவாமி இருந்த இடம் மறைந்துவிட்டது.ஒருசமயம் இங்கு வசித்த பெருமாள் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய சுவாமி, தான் தாமிரபரணி நதிக்கரையில் இத்தலத்தில் இருப்பதாக உணர்த்தினார். அதன்பின் பக்தர் அச்சிலை இருந்ததைக் கண்டார். பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

நம்பிக்கைகள்:

                  நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், செல்வம் பெருகவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

      மூலஸ்தானத்தில் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி, சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறாள். எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் சுவாமிக்கு, “நித்ய கல்யாணப்பெருமாள்’ என்றும் பெயர் உண்டு. தலத்திற்கும், “கல்யாணபுரி’ என்ற புராணப்பெயர் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உற்சவ மூர்த்திக்கு, திருமஞ்சனம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு இருபுறமும் பிரகாரத்தில் தாயார், ஆண்டாள்தான் தனிச்சன்னதியில் இருப்பர். ஆனால் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இத்தல பெருமாளைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். இங்கு பிரார்த்திக்கும் பக்தர்கள் பெருமாளை, கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் வருடத்தில் அதிக நாட்களில் இக்கோயிலில், பெருமாளின் கருடசேவையைத் தரிசிக்கலாம்.

இரண்டு பெருமாள் தரிசனம்: சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது. இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, அருகில் பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர்.தினமும் காலையில் ஆதிவராகருக்கு திருமஞ்சனம் செய்தபின்பு, ஒருவேளை மட்டும் இவருக்கு பூஜை செய்கின்றனர். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.கோயில் மேல்புற சுவரில், மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன ஆடை அணிவித்து, விசேஷ பூஜை செய்கிறார்கள்.

திருவிழாக்கள்:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரத்தை ஒட்டி ஊஞ்சல் உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

காலம்

ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கல்லிடைக்குறிச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top