கர்ணத்தம் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
கர்ணத்தம் சிவன்கோயில்,
கர்ணத்தம், விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606104.
தொடர்புக்கு திரு. சுந்தரமூர்த்தி செட்டியார் தர்மகர்த்தா 9789324800
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மங்கலம்பேட்டையிலிருந்து 1. கி.மீ. தொலைவில் உள்ளது கர்ணத்தம் ஊராட்சி. கர்ணத்தம் அழகான சின்னஞ்சிறு கிராமம். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கிராமம் இது என்பதை தெருக்களின் நேர்த்தியும், ஊரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கோயில்களும் சொல்லும். ஊருக்கு மேற்கே பெரிய குளம். அதை ஒட்டி அரசமரத்தடி நாகர். அதைத் தாண்டி ஏரி. ஏரிக்கு ஒதுக்குப் புறமாக ஒரு குளம். இதற்கு கற்குளம் என்று பெயர். அந்த குளக்கரையோரம் சிதிலமடைந்து கிடக்கும் இரண்டு மண்டபங்கள். இது தான் ஊரின் அமைப்பு. இங்கு வடகிழக்கு பகுதியில் உள்ளது பழமையான சிவன் கோயில் கிழக்கு நோக்கியது,எனினும் வாயில் தென்புறத்தில் உள்ளது. கிழக்கு மதில் சுவற்றில் இரு சிறிய சாளரங்கள் மட்டும் உள்ளன. வடகிழக்கில் பெரிய அரசமரம் ஒன்றும், அதனை சுற்றிய சிமென்ட் மேடையில் அழகிய விநாயகர் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்.
புராண முக்கியத்துவம் :
கோயிலில் திருப்பணி வேலைகள் நடந்து வருவதை பார்க்கிறோம், தென்புற வாயிலை இடித்துவிட்டு உயர்ந்த மூன்று நிலை ராஜ கோபுரம் ஒன்று கருங்கல்லால் கட்ட ஆரம்பித்து உள்ளனர். இறைவன் இறைவி இருவரும் கிழக்கு நோக்கிய கருவறைகள் கொண்டுள்ளனர். இறைவனின் இடப்பாகம் இறைவி இருப்பதால் இது இறைவனின் திருமணத்திற்கு பிந்தைய கோலம் என்பர், இத்தகைய கோலம் கொண்ட கோயில்களில் தம்பதியராக வணங்கினால் பிணக்கின்றி இணைபிரியாது மக்கட்செல்வத்தொடு வாழ்வர். இறைவன் இறைவனது கருவறை சுற்றில் தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன் என இருந்துள்ளது. தற்போது தென்முகன் சிலை பின்னப்பட்டுள்ளதால் தனியாக வைத்துள்ளனர்.
இறைவி கிழக்கு நோக்கி தனி சன்னதியில் உள்ளார். இறைவன் இறைவி இருவரது கருவறை முன்னம் நீளஅகலத்தில் கருங்கல் தூண்களுடன் மண்டபம் உள்ளது. அதில் நவக்கிரக மேடை உள்ளது இந்த ஒன்பது சிலைகளும், பிற சிலைகளும் திருப்பணிகள் காரணமாக தனியாக வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மூலையில் மதில் சுவற்றினை ஒட்டியபடி ஒரு கிணறும் உள்ளது. விநாயகர் சுப்ரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கர்ணத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி