கருப்பூர் சோமநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கருப்பூர் சோமநாதர் சிவன்கோயில்,
கருப்பூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611101.
இறைவன்:
சோமநாதர்
இறைவி:
சோமநாதர்
அறிமுகம்:
திருவாரூர் – கீவளூர் சாலையில் உள்ள அடியக்கமங்கலம் வந்து ரயிலடி சாலையில் நேர் தெற்கில் இரண்டு கிமீ சென்றால் கருப்பூர் கிராமம். இங்கு ஊரின் முகப்பில் உள்ள பெரிய செவ்வக வடிவ குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய சிவன் கோயிலாக உள்ளது, சமீபத்தில் குடமுழுக்கு கண்டு புதிதாக உள்ளது. இறைவன்- சோமநாதர் இறைவி – அழகிய நாயகி சோமன் எனும் சந்திரன் வழிபட்ட இறைவன் என்பதால் சோமநாதர் எனப்படுகிறார். சோமன் என்றால் நீலகண்டன் என்ற பொருளும் உண்டு.
சதுரவடிவ ஆவுடையாருடன் கிழக்கு நோக்கியவர். இறைவனது விமானம் பிற தலங்களில் இருந்து மாறுபட்டு நாகர விமானமாக உள்ளது. இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். முகப்பு மண்டபத்தில் பைரவர் அருகில் சூரியனும் உள்ளார். முகப்பு மண்டபத்தின் வெளியில் தனி மண்டபத்தில் நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் சிறிய அளவில் உள்ளார். பிரகார சிற்றாலயங்களில் முதலில் விநாயகர் சிறிய அளவில் உள்ள சன்னதியில் உள்ளார். அடுத்து நாகர்களும் ஒரு லிங்க மூர்த்தியும் உள்ளனர். காரணம் தெரியவில்லை. அடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். சண்டேசரும் தனி சன்னதி கொண்டுள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி