கருங்கல்பாளையம் ஸ்ரீ கோதண்டராமசுவாமி திருக்கோயில், ஈரோடு
முகவரி :
கருங்கல்பாளையம் ஸ்ரீ கோதண்டராமசுவாமி திருக்கோயில்,
ராமானுஜ நகர், கருங்கல்பாளையம்,
ஈரோடு மாவட்டம்,
தமிழ்நாடு – 638003
தொலைபேசி: +91-424 – 221 28 16.
இறைவன்:
ஸ்ரீ கோதண்டராமசுவாமி
இறைவி:
சீதாபிராட்டி
அறிமுகம்:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கோதண்டராமசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு கோதண்டராமஸ்வாமி என்றும், தாயார் சீதாபிராட்டி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. ஈரோடு நகருக்குள் கருங்கல்பாளையத்தில் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 அடி தொலைவில் கோயில் உள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் ஈரோடு. அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
புராண முக்கியத்துவம் :
திருமணம், சமூக மற்றும் மத வழிபாடு கூட்டங்கள் நடத்த ஏதுவாக 1974ம் ஆண்டில் ஈரோடு ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில் சமுதாய கூடம் ஒன்று நிறுவப்பட்டது. இங்கு சித்தி விநாயகர் கோயிலும், நவக்கிரகங்கள் சன்னதியும் கட்டப்பட்டன. கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் ஸ்ரீகோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மகாஸம்ப் ரோஷணம் அஹோபில மடத்தின் 44ம் பட்டம் ஸ்ரீ மத் அழகியசிங்கர் ஜீயஜீ ர் சுவாமியால் நடத்தப்பட்டது.
நம்பிக்கைகள்:
வெள்ளிக்கிழமைகளில் ராமபிரான், சீதா தேவிக்கு நெய்தீபம் ஏற்றி, 12 கோயில் பிரகாரத்தை வலம் வந்து அர்ச்சனை செய்தால் சகல நன்மைகள் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பதும், 16 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 16 முறை பிரகாரம் வலம் வந்தால் மனோவியாதி, தொழில் தடங்கல் ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, 16 முறை சுற்றி வந்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். வியாழக் கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் லோகநரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து 16 முறை சுற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கி, சகல காரிய சித்தி ஏற் படும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வாரை 12 முறை சுற்றி அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள் நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜருக்கு நெய் தீபம் ஏற்றி, 12 முறை சுற்றி வந்தால் சரும நோய் நீங்கும்.
சிறப்பு அம்சங்கள்:
ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று கோதண்டராம சுவாமிக்கும், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் கூட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.
திருவிழாக்கள்:
ராம நவமி உத்ஸவம், சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக நடந்து வருகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருங்கல்பாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்