கப்ரா கோடியா புத்த குகைக் கோவில், குஜராத்
முகவரி
கப்ரா கோடியா புத்த குகைக் கோவில், முல்லாவாடா, ஜுனாகத், குஜராத் – 362001
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
ஜுனாகத் பெளத்த குகைக் குழுக்களின் ஒரு பகுதியாக கப்ரா கோடியாவின் புத்த குகைகள் இந்தியாவில் குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. “பெளத்த குகைகள்” என்று அழைக்கப்படுபவை உண்மையில் குகைகள் அல்ல, துறவிகளின் குடியிருப்புகளாகப் பயன்படுத்த கல்லால் செதுக்கப்பட்ட மூன்று தனித்தனி அறைகள். புத்த குகைகள் மிகப் பழமையானவை.
புராண முக்கியத்துவம்
சுவரில் உள்ள கிறுக்கள்கள் மற்றும் எழுத்துகளின் அடிப்படையில் மிகப் பழமையான, கப்ரா கோடியா குகைகள், அசோக பேரரசரின் ஆட்சிக் காலத்தில் கிமு 3 -4 ஆம் நூற்றாண்டை சேரிந்தவை. இந்த குகைகள் கங்கர் மஹால் என்றும் அழைக்கப்படுகின்றன. அசோக பேரரசரின் ஆட்சிக் காலத்தில் அவை பாறையில் செதுக்கப்பட்டன, மேலும் இப்பகுதியில் ஆரம்பகால துறவறக் குடியேற்றமாகக் கருதப்படுகின்றன. இந்த குகைகள் பண்டைய சுதர்சன் ஏரியின் விளிம்பிலும், வடக்கே உபர்கோட் கோட்டைக்கு வெளியேயும் உள்ளன. அவை கிழக்கு-மேற்கு நீளமான பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. குகைகள் பரப்பளவில் சிறியவை. ஆனால், மேற்கில் தண்ணீர் தொட்டிகள் வடிவமைப்பு மற்றும் ‘எல்’ வடிவ குடியிருப்பின் தனித்துவமான கட்டிடக்கலை உள்ளது. பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு, அவை கைவிடப்பட்டன, ஏனெனில் அதில் உள்ள விரிசல்கள் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து, அவற்றை பயன்படுத்த முடியாததாக ஆக்கியது. இதற்குப் பிறகு, துறவிகள் மகாராஷ்டிராவுக்குப் புறப்பட்டதாக பலர் கூறுகின்றன, கபாரா கோடியா, பின்னர் குவாரிகள் ஆரம்பித்ததன் மூலம் சேதமடைய ஆரம்பித்தது.
காலம்
3 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜூனாகத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குஜராத்
அருகிலுள்ள விமான நிலையம்
கேஜோத்