கஞ்சனூர் (வடகஞ்சனூர்) இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி
கஞ்சனூர் (வடகஞ்சனூர்) இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் (வடகஞ்சனூர்), விழுப்புரம் மாவட்டம் – 605203.
இறைவன்
இறைவன்: இராமலிங்கேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி
அறிமுகம்
தென் நாட்டில் கஞ்சனூர் என்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. எனவே இத்தலத்தை ‘வடகஞ்சனூர்’ குறிப்பிட்டனர். ஆனால் இன்று இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்குகிறது. தமிழ் நாடு சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று – ரயில்வே Gateஐ யொட்டி செல்லும் – விழுப்புரம் – செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் சென்று – கஞ்சனூர் கூட் ரோட்டை அடைந்து – அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் கஞ்சனூரை அடையலாம். இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள நடுநாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
கோயிலுக்கு வெளியில் எதிரில் மகிழ மரத்தின் கீழ் துர்க்கை வீற்றிருக்கின்றாள். பக்கத்தில் விநாயகர் சந்நிதி சிறிய கோவிலாக உள்ளது. கோயில் முகப்பு வயில் இருபுறமும் நந்திகள் உள்ளது. வாயிற்கதவு தாண்டியதும் நேரே மூலவர் தரிசனம். இறைவன் – இராமலிங்கேஸ்வரர் என்றும் இறைவி – செளந்தரநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். பிராகரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் உள்ளார். அம்பாள் தனிக்கோயிலாக வீற்றிருக்கிறாள். நடராச சபை உள்ளது. சனீஸ்வரன் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்கை எழுந்தருளியுள்ளனர். 1986-ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
திருவிழாக்கள்
பிரதோஷம், அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை, கிருத்திகை முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் திருக்கல்யாண உற்சவமும் சுவாமி புறப்பாடும் நடைப்பெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கஞ்சனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விக்கிரவண்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி