ஓதவந்தான்குடி வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
ஓதவந்தான்குடி வேதபுரீஸ்வரர் சிவன்கோயில்,
ஓதவந்தான்குடி, சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609108.
இறைவன்:
வேதபுரீஸ்வரர்
இறைவி:
பாலவித்யாம்பிகை
அறிமுகம்:
சிதம்பரம்-கொள்ளிடம்-புத்தூர்-மாதானம் சாலையில் திருமயிலாடி தாண்டி வலதுபுறம் ஒரு பெரிய சர்ச் செல்லும் வளைவின் வழி ஓதவந்தான்குடி சென்று சிவன்கோயில் எங்குள்ளது என கேட்டு செல்லவும். எனெனில் பெரிய சிவாலயம் சிதிலமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. (இடங்களும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளன. அரசும் தன்பங்கிற்கு ஒரு பள்ளியினை கட்டிவருகிறது.) ஒரு ஓட்டு கட்டிடத்தில் சிவன் தனது துணைகளான விநாயகன், தண்டாயுதபாணி, அம்பிகை, தட்சணாமூர்த்தி, சண்டேசர் மேலும் ஒரு சிவலிங்கம் அம்பிகையுடன் உள்ளார். விநாயகருக்கு தனி சிற்றாலயம் ஒன்று அருகில் உள்ளது. பழம்பெரும் கோயிலின் மிச்சம் என்றே கருதலாம். இறைவன் வேதபுரீஸ்வரர் இறைவி-பாலவித்யாம்பிகை.
இந்த கோயில் ஏழாம் நூற்றாண்டின் முன்னம் கட்டப்பட்ட கோயில் ஆகும், இங்கு திருஞானசம்பந்தரின் திருமணதிற்கு வந்த வேதம் ஓதுவார்கள் வந்து தங்கிய இடம் என்பதால் ஓத வந்தார் குடி எனப்பட்டது. இக்கோயிலில் சிறப்பு என்னவென்றால் ஒரே கருவறையில் இரு மூலவர்கள் உள்ளனர். ஆனால் தினசரி பூஜையின்போது நேர் எதிரில் உள்ள மூலவரை மட்டுமே தரிசிக்க இயலும் மகா சிவராத்திரி அன்று மட்டுமே இரு மூலவர்களியும் தரிசிக்க பக்தர்கள் உள்ளே அனுமதிக்ப்படுகின்றனர். தினசரி தரிசனம் தருபவர் வேதபுரீஸ்வரர் மகாசிவராத்திரி ஆண்டு மட்டும் தருபவர் வேதபோதேஷ்வரர். இந்த நடைமுறை பழம் பெரும் கோயில் இருந்தபோது இருந்த நடைமுறையாகும் . தற்போது இறைவன் இருப்பதே ஒரு பழுதடைந்த ஒட்டு கட்டிடத்தில் தான் அவ்வப்போது குருக்கள் ஒருவர் வந்து பூஜை செய்து செல்கிறார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
7 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓதவந்தான்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி