ஏகத்தார்சோ மகாதேவா கோவில் (செளஸாத் யோகினி கோவில்), மிட்டோலி
முகவரி
ஏகத்தார்சோ மகாதேவா கோவில் (செளஸாத் யோகினி கோவில்), மிட்டோலி, மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம் – 476 444
இறைவன்
இறைவன்: மகாதேவர்
அறிமுகம்
ஏகத்தார்சோ மகாதேவா கோவிலை செளஸாத் யோகினி கோவில் என்று அழைக்கப்படும் இந்தக்கோவில், குவாலியருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவிலும், மத்திய பிரதேசத்தில் மொரேனாவிலிருந்து 15 கிமீ கிழக்கிலும் உள்ள சிறிய அமைதியான கிராமமான மிட்டோலியில் (மிதாலி அல்லது மிதாவாலி என்றும் அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது. ஜபல்பூர் அருகே உள்ள சிறு குன்றின் மீது கிட்டத்தட்ட 100 படிக்கட்டுகளை கடந்தவுடன் தென்படுகிறது இந்த யோகினி கோவில். இதோடு அமைப்பு வட்ட வடிவ வளாக மதில் சுவர்களுடனும், அதன் கருவறைகள் ஒவ்வொன்றும் துர்க்கையின் உருவச் சிலை என 64 யோகினிகளின் சிற்பங்களும் இருந்துள்ளது. 64 யோகினி சிற்பங்களுக்கு நடுவில் நந்தியும் சிவனும் இருக்கிறார்கள்.
புராண முக்கியத்துவம்
சுற்றளவு சுவரின் உட்புறத்தைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அறைகளிலும் இப்போது சிவனின் உருவம் உள்ளது. இருப்பினும், முதலில் இவற்றில் 64 யோகினி உருவங்களும், தேவி என்ற பெரிய தெய்வத்தின் ஒரு உருவமும் உள்ளன. கோவில் சுதை சிற்பங்களும் அவ்வளவு நெர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. 1323ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தகவல்களின் படி, இந்த கோவில் கச்சப்ப ஃகடா மன்னன் தேவபாலா பொது யுகம் 1055-1075க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டிருக்கிறார்ஜள். நம்ம இந்திய பாராளுமன்ற கட்டிடத்த இந்த கோவிலோட அமைப்பு கட்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் இந்த கோவிலை ஒரு பழங்கால மற்றும் வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது. அதுபோக வானியல் கணக்கீடுகளை கொண்டு கட்டப்பட்ட மிக அரிதான அமைப்புள்ள தனித்துவம் வாய்ந்த கோவில். இக்கோவில் பல நூற்றாண்டாகுளாக இயற்க்கை சீற்றத்திற்க்கு அகப்பட்டாலும் சேதம் பெரிதாக ஏற்படவில்லை. ஆனால் காலத்தின் மாற்றத்தினாலும், மக்களும் இக்கோவிலை கவனிப்பதாக தெரிவதில்லை. தற்போது கோவில் சிதைய ஆரம்பித்துள்ளது.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மிட்டோலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குவாலியர்
அருகிலுள்ள விமான நிலையம்
குவாலியர்