இராமச்சந்திரபுரம் முற்காலப் பாண்டியர் குடைவரை கோயில், திருநெல்வேலி
முகவரி
இராமச்சந்திரபுரம் முற்காலப் பாண்டியர் குடைவரை கோயில், இராமச்சந்திரபுரம், மானூர் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் – 627012.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
திருநெல்வேலி மாவட்டம் இராமச்சந்திரபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்குடைவரையின் மூத்ததேவியான தவ்வையின் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. தவ்வை தம் உடன்கூட்டத்தாரோடு அமர்ந்த கோலத்தில் இச்சிற்பத்தில் காணப்படுகிறாள். அருகில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட பிள்ளையார் உருவம் முற்றுப் பெறவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவரது செயல்பாடாய் இக்குடைவரை திகழ்கிறது. இக்குடைவரை முற்காலப் பாண்டியரது காலமாய் இருக்கலாம்.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராமச்சந்திரபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி