இனாம்கிளியூர் சிவன் கோயில், தஞ்சாவூர்
முகவரி :
இனாம்கிளியூர் சிவன்கோயில்,
இனாம்கிளியூர், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614207.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
பட்டீஸ்வரத்தின் தெற்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது கோவிந்தகுடி இதன் மேற்கில் செல்லும் நல்லூர் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இந்த இனாம்கிளியூர் உள்ளது. ஊரின் நடுவில் செல்லும் தெருவில் ஒரு வீட்டின் பின்புறம் பெரிய திடலில் பனைமரங்களின் கீழ் உள்ளது இக்கோயில். இங்கு ஆயிரம் ஆண்டுகலுக்கு மேல் பழமையான திருக்கோயில் ஒன்று இருந்து முற்றிலும் சிதிலமாகியபின், அதிலிருந்த பிரம்மாண்டமான லிங்கம் மட்டும் இன்றும் காணக்கிடைக்கிறது. ஆளுயரத்திற்கு சற்றும் குறையாத அளவில் உள்ளது லிங்கம் அதற்கேற்றாற்போல் பத்ம செதுக்கல்களுடன் உள்ளது ஆவுடையார். மேற்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளதை பழமையான அடித்தளம் சொல்கிறது. இறைவனுக்கு நேர் எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. ஜேஷ்டா தேவியின் உடைந்த சிலையை காணமுடிகிறது. கோயிலின் காலம் காட்ட மட்டுமே இன்று உதவும் வண்ணம் ஓரமாக கிடக்கிறது. விரைவில் பெருங்கோயில் ஒன்றை காண வேண்டும்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இனாம்கிளியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி