ஆதீனக்குடி சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஆதீனக்குடி சிவன்கோயில்,
ஆதீனக்குடி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609702.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
சன்னாநல்லூரில் இருந்து திருமருகல் சாலையில் 10 வது கிமீ-லும் திருமருகலுக்கு ½ கிமி முன்னதாகவும் உள்ளது இந்த ஆதீனகுடி. பண்டாரவாடை கிராமங்கள் கோயிலுக்கு அல்லது மடத்திற்கு கொடுக்கப்பட்ட ஊராகலாம். இவ்வூரில் சிறிய சிவன் கோயில் ஒன்று இருந்தது!! ஆம் இருந்தது. தற்போது முற்றிலும் சிதைந்து போய் அதிலிருந்த மூர்த்திகள் எடுக்கப்பட்டு தனியாக ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு உள்ளன. சிறிய கோயிலாக இருந்துள்ளது. கடவுள் மறுப்பு இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட குத்தகைதாரர்கள் குத்தகை மறுக்க, கோயில் நிலங்களின் வருவாய் நின்று போய் சிவவழிபாடு செய்யும் குடியினர் பணி, பொருள் தேடி பெரு நகரங்களுக்கு வேலை தேடி சென்றுவிட இங்கு கிராம சிவாலயங்கள் சிதைய ஆரம்பித்தன.
இதோ இந்த சிறிய ஆலயத்தை கூட புனர்நிர்மாணம் செய்ய வழில்லாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். கருவறைகள் முற்றிலும் இடிந்துவிட்டன, சிவன் மட்டும் விடாப்பிடியாக இன்னும் தன்னிருப்பை மாற்றிக்கொள்ளாமல் உள்ளார். பிற மூர்த்திகள் ஒரு தனி கொட்டகையில் உள்ளன. இன்று இருப்பவை இரு விநாயகர்கள், அம்பிகை, முருகன், வள்ளி மட்டும் , லட்சுமிநாராயணர், சண்டேசர் ஒரு நந்தி ஒரு பலிபீடம் என முழு தொகுப்பும் உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆதீனக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி