ஆண்டால்அம்மா பழைய கோயில் , தெலுங்கானா
முகவரி
ஆண்டால்அம்மா பழைய கோயில், தர்மபாத், பெடாப்பள்ளி, தெலுங்கானா 505001
இறைவன்
இறைவன்: சிவன் மற்றும் விஷ்னு
அறிமுகம்
ஆண்டால்அம்மா பழைய கோயில் இடைக்காலத்தின் பிற்பகுதியில் உள்ள கோயில் ஆகும். பெடாப்பள்ளி மாவட்டத்தின் தர்மபாத் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இது கரீம்நகரிலிருந்து கிழக்கு நோக்கி 39 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கோயிலாகவும், மண்டபமாகவும், தெலுங்கானா பகுதியில் வைணவம் பரவிக் கொண்டிருந்த குதுப்ஷாஹி காலத்தில் கட்டப்பட்டதாகவும் தெரிகிறது. கோவிலில் சிலைகள் இல்லை. கோவிலின் சிலை அனைத்தும் திருடப்பட்டுள்ளது. இக்கோயில் காலங்காலமாக பராமரிக்கப்படுவதில்லை / வணங்கப்படுவதில்லை. சிவன், விஷ்ணு போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று கிராமவாசி கூறுகின்றனர். இந்த கோயிலின் கட்டிடக்கலை மிகவும் தனித்துவமானது மற்றும் அழகானது. ஆனால் கோவில் தற்போது இடிந்து சிதைந்த நிலையில் உள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தர்மபாத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கரீம்நகர்
அருகிலுள்ள விமான நிலையம்
கரீம்நகர்