ஆண்டாங்கோயில் காட்சிகொடுத்தநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆண்டாங்கோயில் காட்சிகொடுத்தநாதர் சிவன்கோயில்,
ஆண்டாங்கோயில், நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612804.
இறைவன்:
காட்சிகொடுத்தநாதர்
அறிமுகம்:
கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோயில் என்ற பெயருடன் அறியப்படுகிறது. ஆனால் ஆண்டாங்கோயில் என்பது ஆற்றின் தென் கரையில் ஒரு சிறிய கோயிலாக உள்ளது. வலங்கைமான் – குடவாசல் சாலையில் உள்ள ஆண்டாங்கோயில் நிறுத்தத்தில் இருந்து தென்புறம் செல்லும் கடுவாய்க்கரைப்புத்தூர் கோயில் செல்லும் சாலையில் ½ கிமீ சென்றவுடன் வலதுபுறம் சிறிய சாலை செல்கிறது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லகூடிய சிறிய பாதை, இதில் அரைகிமீ தூரம் சென்றால் ஒரு செங்கல் காளவாய் இடத்தில் உள்ளது.
பாம்பு புற்றை ஒட்டி இருந்த ஒற்றை லிங்கத்திற்கு தகர கொட்டகை கோயில் ஒன்று உருவாக்கி உள்ளது. எதிரில் புதிய நந்தி சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகிறன. இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். பாம்பு புற்றை கலைத்து எடுக்கப்பட்டதால் சில நாகர் சிலைகள் வரிசையாக ஒரு வன்னி மரத்தடியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. இறைவன் மன்னனுக்கும் மந்திரிக்கும் இங்கே காட்சி கொடுத்ததால் காட்சிகொடுத்தநாதர் எனும் பெயரில் அமர்ந்துள்ளார்.
புராண முக்கியத்துவம் :
முசுகுந்த சக்கரவர்த்தியின் மந்திரி கண்டதேவர் திருவாரூர் கோயில் கட்டுவதற்காக கல் கொண்டு வரும்போது, வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்து அருளினார். முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் கோயில் கட்டிக்கொண்டிருந்தபோது கண்ட தேவர் என்ற மந்திரி கல் கொண்டுவர சென்று திரும்பும்போது இருட்டிவிட்டது, சிவதரிசனம் செய்யாமல் உணவருந்தமாட்டார் அதனால் உணவருந்தாமல் படுத்துவிட்டார், இறைவன் அவரது கனவில் வந்து கடுவாய்க்கரை ஆற்றின் தென் கரையில் உள்ள வன்னியின் கீழ் நான் உள்ளேன் அங்கு வந்து தரிசனம் செய்வாயாக என்றார். மந்திரி வன்னி மரத்தடியில் தனித்திருந்த லிங்கத்தை கண்டு வணங்கி சென்றார், திருவாரூர் செல்லும் ஒவ்வொரு வண்டியில் இருந்தும் ஒரு கல்லும் ஒரு கை சுண்ணமும் கொண்டு வந்து இவ்விடத்தில் ஒரு சிறு கோயிலை கட்டி முடித்தார் இது கேட்ட மன்னன் சிவ அபராதம் செய்துவிட்டாய் என தலையை துண்டிக்க ஆணையிட்டான், இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு இருவருக்கும் முக்தியளித்ததாக ஒரு புராண வரலாறு. மந்திரியின் பெயர் கண்டதேவர் அதனால் கண்டதேவர் கோயில் எனப்பட்டு ஆண்டவர்கோயில் ஆகி ஆண்டாங்கோயில் ஆனது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டாங்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி