ஆச்சாள்புரம் சக்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
ஆச்சாள்புரம் சக்தீஸ்வரர் சிவன்கோயில் , கொள்ளிடம் – ஆலக்குடி சாலை, ஆச்சாள்புரம், சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் – 609 101
இறைவன்
இறைவன்: சக்தீஸ்வரர்
அறிமுகம்
கொள்ளிடத்தின் கிழக்கில் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. தான். இவ்வூரில் மூன்று சிவன் கோயில்கள் இருப்பது பலருக்கு தெரியாது. முதலில் வருவது கடைத்தெரு பேருந்து நிலையம், அதன் அருகில் சக்தீஸ்வரர் எனும் பெயரில் சிவன்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய சிறிய கோயில், வாயிலின் மேல் புறம் அம்பிகை லிங்கத்திருமேனியை தழுவியபடி உள்ள சுதை காணப்படுகிறது. கருவறையில் அம்பிகை லிங்கதிருமேனியை தழுவியப்படி காட்சியளிக்கிறார், அதனால் அம்பிகைக்கு தனிக்கோவில் இல்லை. இறைவன் சன்னதி வாயிலில் இரு துவாரபாலகர்களால் காக்கப்படுகிறது, எதிரில் நந்தி உள்ளார். 10 கைகளுடன் வல்லபலட்சுமியை மடியில் இருத்திய வண்ணம் விநாயகரும், 12 கைகளுடன் மயில் வாகனத்தில் திருவாட்சியுடன் ஒரே கல்லில் உள்ள ஆறுமுகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளது. இவை தவிர சண்டேசர் உள்ளார். இடும்பன் சன்னதி தனித்து கோயில் எதிரில் உள்ளது. இக்கோயில் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில், அதனால் பராமரிப்பு குறைவாகவே உள்ளது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடைத்தெரு
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொள்ளிடம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி