அவந்திஸ்வாமி (அவந்திபூர்) கோயில், ஜம்மு-காஷ்மீர்
முகவரி
அவந்திஸ்வாமி (அவந்திபூர்) கோயில், தேசிய நெடுஞ்சாலை 1 ஏ, அவந்திப்பூர், புல்வாமா மாவட்டம், ஜம்மு-காஷ்மீர் – 192122
இறைவன்
இறைவன் : சிவன் & விஷ்னு
அறிமுகம்
அவந்திஸ்வாமி கோயில் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அவந்திபோராவில் அமைந்துள்ள கோவிலாகும். சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு தலா இரண்டு கோயில்கள் இருந்தன. இந்த கோயில்களை 9 ஆம் நூற்றாண்டில் உத்பாலா வம்சத்தின் மன்னர் அவந்திவர்மன் ஜீலம் ஆற்றின் கரையில் இந்த கோயில்கள் கட்டப்பட்டன. கோயில்கள் பூகம்பத்தால் அழிந்துவிட்டது. மேலும் இந்த இடத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.
புராண முக்கியத்துவம்
இந்த அழகிய கோயில் கி.பி 853-855 ஆம் ஆண்டில் அவந்திவர்மன் மன்னரால் கட்டப்பட்டது. முதலில் விஸ்வாசரா என்று அழைக்கப்பட்டது, அப்போது தலைநகராக இருந்த பண்டைய நகரம் அவந்திவர்மன் மன்னரால் நிறுவப்பட்டது. கி.பி 9 ஆம் நூற்றாண்டில் உத்பாலா வம்சத்தை நிறுவியவர் அவந்திவர்மன் மன்னர். அவர் தனது ஆட்சிக் காலத்தில் இந்த பிராந்தியத்தில் பல பெரிய இந்து கோவில்களைக் கட்டியிருந்தார், அவற்றில் சில மட்டுமே இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் வன்முறைக்கிளர்ச்சியின் காரணமாக அழிக்கப்பட்டுள்ளன. அவந்திவர்மன் மன்னனின் ஆட்சிக் காலத்தில், இப்பகுதி செழித்துள்ளது. அந்த சகாப்தத்தில் காஷ்மீரின் சுவாரஸ்யமான கற்க்கோயில் கட்டிடக்கலையை தருகிறது. காஷ்மீரின் கோயில்கள் காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் உள்ள பல பழங்கால கோயில்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. காஷ்மீர் சைவ மதத்தின் தத்துவ மையமாகவும் இஸ்லாமிய படையெடுப்புகளுக்கு முன்பு சமஸ்கிருத கற்றல் மற்றும் இலக்கியங்களின் இடமாகவும் இருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அதன் ஆரம்பகால கோயில்களில் பெரும்பாலானவை 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அவந்திபூர் காஷ்மீரின் உத்பாலா வம்சத்தின் நிறுவனர் அவந்திவர்மனால் (ஆட்சி 855-83) நிறுவப்பட்டது. இங்குள்ள இரண்டு கோயில்கள், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவந்திஸ்வாமி கோயில் மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவந்திஸ்வரர் கோயில். அவந்திஸ்வாமி அளவு சிறியது, ஆனால் மார்த்தாண்டக் சூரிய கோவிலுக்கு ஒத்ததாக இருந்ததுள்ளது.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அவந்திப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஸ்ரீநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஸ்ரீநகர்