அழகியமணவாளம் பாய்ச்சில் அமலேஸ்வரர் கோயில், திருச்சி
முகவரி
அழகியமணவாளம் பாய்ச்சில் அமலேஸ்வரர் கோயில், அழகியமணவாளம், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் – 621216
இறைவன்
இறைவன்: அமலேஸ்வரர்
அறிமுகம்
சென்னையிலிருந்து 316 கி.மீ தொலைவில் உள்ள திருச்சி – திருபைஞ்ஞீவி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும் சிற்றூரில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூர் கல்வெட்டுகளில் பாய்ச்சில் என்றும் ஊர் பிரிவு மழ நாட்ட ராஜாசரய வளநாட்டு பாய்ச்சில் என்றும் குறிக்கப்படுகிறது. உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேயதிரன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. கோயில் கடட்ப்பட்ட காலம் கி.பி 975 என்றும் குறிப்பிடப்படுகிறது. கண்டராதித்த சோழரின் தேவி, உத்தம சோழரின் தாயாரான செம்பியன் மாதேவி இக்கோயிலுக்கு நிலவிளக்ககள் அளித்துள்ளார்கள். உத்தம சோழரின் தேவி வீரநாரயணீயார், அவனி சுந்தரர் செப்புதிருமேனியும், செய்தளித்தார், மற்றும் வைகாசி விசாகத் திருவிழா நடத்த வகைவழி செய்தார். மாதந்தோறும் இராஜராஜசோழன் பிறந்த சதைய தினத்தன்று நீராட்ட விழாவுக்கும், திருவமுதுக்கம் வகைச் செய்யப்பட்டது. இராஜராஜனின் மூத்த தமக்கை குந்தவை பிராட்டியர் பிறந்த அவிட்டதன்று மாதந்தோறும் திருவிழா நடத்த வகைச் செய்யப்பட்டது. கோயிலின் அடித்தளத்தில் இராமாயணக்கதை சிறு சிறு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் விமானம் செங்கற்களால் கட்டப்பட்டு இடிந்து விட்டது. இக்கோயில் தஞ்சாவூர் பெரிய கோயில் இராஜராஜன் கல்வெட்டகளில் குறிக்கப்பெற்றுள்ளது.
காலம்
975 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோபுரப்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி