அருள்மிகு விஸ்வநாதஸ்வாமி சிவன் கோயில், புளியஞ்சேரி
முகவரி
அருள்மிகு விஸ்வநாதஸ்வாமி சிவன் கோயில், புளியஞ்சேரி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612604 Mob: +91- 9976710296, +91 – 9784912113
இறைவன்
இறைவன்: விஸ்வநாதஸ்வாமி இறைவி : விசாலாக்ஷி அம்பிகா
அறிமுகம்
தமிழக மாநிலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், 27- புளியஞ்சேரி என்ற கிரமத்தில் அமைதுள்ளது ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி. புளியஞ்சேரி கிராமம் முடிகொண்டான் ஆற்றுக்கு அருகிலும் 120 வீடுகளை கொண்ட சிற்றூராகும். ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி திருக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. இந்த திருக்கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள விக்கிரபாண்டியம் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீ சங்கரய்யர் குடுமபத்தினரால் கட்டிவைக்கப்பட்டது. சங்கரய்யர் குடும்ப வாரிசுகள் இருந்தவரை கோவில் நித்தியபடி பூஜை மற்றும் திருவிழா நடைபெற ஏற்பாடுகள் செய்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகமும் செய்து வைத்துள்ளார்கள். அதன் பிறகு வயது முதிர்வின் காரணமாக இந்த கோவிலை இந்து அறநிலையத்துறைக்கு விட்டு கொடுத்து விட்டார்கள். பின்பு அறநிலையத்துறை மூலம் எந்த விதமான பராமரிப்பும் , நித்தியபடி பூஜைகள் நடைபெறாமலும் கோவிலின் விமானங்களில் அதிகமாக மரங்கள் முளைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
புளியஞ்சேரி கிரமத்தில் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி திருக்கோவிலும், ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலும் பக்கத்து பக்கத்தில் அமைந்துள்ளது. இது வேறு எந்த கிராமத்திலும் காண முடியாத சிறப்பாகும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிலாவடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி