Friday Jan 24, 2025

அருள்மிகு விபாஸா சக்திப்பீடக் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி

அருள்மிகு விபாஸா சக்திப்பீடத் திருக்கோயில் தம்லுக், மேதினிப்பூர் மாவட்டம் மேற்கு வங்காளம் – 721 636

இறைவன்

சக்தி: கபாலி (பீம்ரூபா) பைரவர்: சர்வானந்தர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது கணுக்கால்

அறிமுகம்

விபாஸா சக்திப்பீடம் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள தம்லுக் என்ற இடத்திலுள்ள கோவிலை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இங்கு தேவியானவள் ஸ்ரீ பர்கோ பீமா தேவி என்றும் பீமகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோவிலுக்கருகிலேயே ராம் சாகரா என்ற குளம் உள்ளது.

புராண முக்கியத்துவம்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் இடது கணுக்கால் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

மகர சங்கராந்தி, ஷரத் பூர்ணிமா, தீபாவளி, சோம்வதி அமாவஸ்யா, ராம் நவமி, நவராத்திரி ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கியமான விழாக்கள்.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தம்லுக்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கொல்கத்தா

அருகிலுள்ள விமான நிலையம்

கொல்கத்தா

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top