அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்றியூர் – (குன்னியூர்)
முகவரி
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்னியூர் – மாவூர் – அஞ்சல் – 610 202, திருவாருர் (வழி) மாவட்டம்.
இறைவன்
இறைவன்: விசுவநாதர் இறைவி: விசாலாட்சி
அறிமுகம்
திருவாரூர் – திருத்துறைப் பூண்டிச் சாலையில் 10 கி.மீ.ல் குன்னியூர் உள்ளது. சாலையோர ஊர். கோயிலும் சாலையோரமே உள்ளது. சுவாமி – விசுவநாதர், அம்பாள் – விசாலாட்சி. கோயில் முழுவதும் பழுதடைந்துள்ளது. சுற்று மதில் முழுவதும் இடிந்து மேற்புறமும் அழிந்து கோயிலே திறந்த வெளியாகவுள்ளது. கருவறை விமானம் செடிகளால் சூழப்பட்டுள்ளது. சுவாமி மிக சிறிய சிவலிங்கம். வலப்பால் அம்பாள் சந்நிதி. முகப்பு வாயிலின் பக்கத்தில் பெருமாள் சந்நிதி. மொத்தத்தில் கோயில் முழுவதும் விரிசலடைந்துள்ளது. யாரும் இக்கோயிலை ஏறெடுத்துப் பார்ப்பதாகவும் தெரியவில்லை. ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. அறிவுறும் இக்கோயிலைப் புதுப்பிக்கும் சிவா புண்ணியம் இவருக்கு வாய்க்குமோ? பிரார்த்தித்து விட்டு வர வேண்டியுள்ளது. இத்தலம் சம்பந்தர், அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்
காலம்
1000 – 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாருர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி