அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் நாங்கூர்
முகவரி
அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் நாங்கூர் நாங்கூர் அஞ்சல் வழி மங்கைமடம் சீர்காழி வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN – 609110
இறைவன்
இறைவன்: மதங்கீஸ்வரர் இறைவி: மதங்கேஸ்வரி
அறிமுகம்
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு வந்த உமையம்மை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு தீக்குளித்தாள். கோபமுற்ற சிவன் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தைக் கலைத்தார். பிறகும் கோபம் குறையாத சிவன் ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது திருச்சடைமுடி பூமியை 11 இடங்களில் தொட்டது. அந்த இடங்களில் 11 சிவ வடிவங்கள் தோன்றின. கோபம் தணியாத்த சிவனின் ருத்ரதாண்டவத்தால் பூவுலகமே நிலை தடுமாற, மகாவிஷ்ணு 11 வடிவங்கள் எடுத்து வந்து சிவனை சாந்தப்படுத்தினார்.
புராண முக்கியத்துவம்
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அன்னை திருக்கடையூர் அபிராமியை ஆதிபராசக்தியின் பல்வேறு வடிவங்களாய் போற்றித் துதிக்கிறது. அபிராமி அந்தாதியில், ‘மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’ என்பார் அபிராமிபட்டர். சித்திமதி-மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மதங்க கன்னிகைகளில் மூத்தவளும் பேரழகியுமானவள் அன்னை மாதங்கி. அவளது பச்சைநிறம் இந்த மண்ணையே களிக்கச் செய்ததாக அபிராமிபட்டர் போற்றுகிறார். இந்த மாதங்கியை சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் அழைப்பார்கள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்
சிறப்பு அம்சங்கள்
ஆலயத்தில் ஈசனின் எதிரில் இரண்டு நந்திகள் உள்ளன. அதில் மதங்க நந்தி, ஈசனை நோக்கியவாறும், சுவேத நந்தி மறுபக்கம் திரும்பிஇருப்பதையும் காணலாம். மாதங்கி-மதங்கீஸ்வரர் திருக்கல்யாணத்தின் போது ஈசனின் கட்டளைக்கிணங்கி இங்குள்ள நந்தி திருக்கயிலாயம் சென்று அன்னை மாதங்கி சார்பாக சீர் அளித்ததாம். எனவே பிரதோஷத்தின் போது இந்த இரு நந்திகளுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், வறுமையால் திருமணம் கைகூடாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணத் தடை விலகும்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி