அருள்மிகு பெருமாள் திருக்கோயில்
முகவரி
அருள்மிகு பெருமாள் திருக்கோயில், மயானூர், கரூர் மாவட்டம் – 639108
இறைவன்
இறைவன்: பெருமாள்
அறிமுகம்
இக்கோவில் அமைப்பை கவனிக்கும் போது, முன்பக்கத்தில் கொடி கம்பம், சிறிய சந்நிதி முதலியவை இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. பாழடைந்த நிலையில் இருந்த, அந்த கோவிலின் முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதற்கு முன்பாக, சிறிய கோபுரத்துடன் ஒரு சன்னதி எழுந்திருக்க வேண்டும் என அம்மண்டபத்தில், சன்னதி கோபுரத்தின் மேற்பகுதி கிடப்பது எடுத்துக் காட்டுகிறது. அறைகளுடன் கூடிய கோவிலின் உட்புறம் இருட்டாக காணப்படுகிறது. எந்த தூண்களும், சிலைகளும், விக்கிரங்களும் காணப்படவில்லை. இங்கே இருந்த எல்லா விக்கிரங்கள் சிலைகள் சிற்பங்கள் முதலியவை அகற்றப்பட்டது அல்லது எடுத்துச் செல்லப்பட்டது தெரிகிறது. வலது பக்கத்தில், மிக்க கலைநயத்துடன் கூடிய ஒரு வேணுகோபாலன் கற்சிலை உடைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உடைந்த நிலையில் மார்பு அளவில் இருக்கும் அந்த சிலை, முழுமையாக இருந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அபிஷேக நீர் வெளியேறும் குழாய் / கோமுகத்தின் மீது, வேணுகோபாலன் கற்சிலை வைக்கப்பட்டுள்ளது! கர்ப்பகிருகத்தின் பின்பக்கமும் இடிந்த நிலையில் காணப்படுகிறது மற்றும் ஏதோ கற்களை வைத்து கோபுரம் விழுந்து விடாமல் வேலை செய்து இருப்பதை கவனிக்க முடிகிறது. உடைந்த மதிற்சுவர் பாகங்கள், சுற்றிலும் மதிற்சுவர் இருந்ததைல் காட்டுகிறது. மதில் சுவர் பக்கங்களிலும் உடைந்த சிற்பங்களும் கிடைக்கின்றன. அதில் ஒரு கால் பாதம் உள்ளது போன்ற உடைநட பகுதியுமுள்ளது. ஒருவேளை அது, வேணுகோபாலனின் பாதமாக இருக்கலாம். உள்ள கோவிலின் சுவர்களில் கருங்கற்கள் பலவித அளவுகள், அமைப்புகளில் காணப்படுவதால், அவசர-அவசரமாக மராமத்து செய்துள்ளதும் புலப்படுகிறது. இக்கோவிலைத் தான், அங்குள்ளோர் “பெருமாள் கோவில்” என்கின்றனர். அங்கிருப்பவர்கள், விவரங்கள் கேட்டாலும், “தெரியாது” என்று தான் சொல்கின்றனர்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரங்கநாதபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி