அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு
முகவரி
அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்
இறைவன்
இறைவன்- தென்கங்காபுரிஸ்வரர் இறைவி- பிரகன் நாயகி
அறிமுகம்
பண்ருட்டி-பாலூர் சாலையில் நான்கு கிமி தூரத்தில் பாலூருக்கு சற்று முன்னதாக உள்ளது சின்ன நரிமேடு கிராமம். 80 உழைப்பாளி குடும்பங்கள் மட்டும் உள்ளன. இங்குள்ள ஒரு குளக்கரையின் தெற்கில் உள்ளது பழமை வாய்ந்த சிவன்கோயில். செங்கல் தளியாக உள்ளது. இறைவனின் கருவறை மட்டும் நின்று கொண்டிருக்க, அம்பிகை ஆலயம் சிதைந்து விட்டது, முருகனின் கருவறையும் சிதைந்துள்ளது. விநாயகர் , நந்தியும் மட்டும் இறைவனுக்கு துணையாக உள்ளனர் . இறைவன் பிரமிப்பூட்டும் கம்பீரமான பெரும் திருமேனியாக உள்ளார்.இது ஒரு பல்லவர்கால தளி ஆகும்.இங்கு கிடைத்த ஒரு சூல குறியீடு உள்ள கல்வெட்டு ஒன்றில் அபிமான துங்க பல்லவராயன் என்றும்-மன்றில் குனிக்கும் பெருமான் என தொடங்கும் வாசகம் உள்ளதாம் முன்னர் பெரும் சிறப்புடன் இருந்த இவ்வூரின் பெயர் அறந்தாங்கிநல்லூர் என்பதாகும்.முப்புரம் எரித்த சிவனை குளிர்விக்க எண்ணி பார்வதி தேவியார் அவரை கமண்டல (கெடில)நதிக்கரையில் உள்ள இவ்விடத்தில் அமரசெய்கிறார். அப்போது இறைவன் தனது உச்சியில் இருந்து சில முடிக்கற்றைகளை விலக்க கங்கை மூலிகை வனமான இந்த மண்ணில் வீழ்ந்து சிறிது குளமாக தேங்குகிறது. அதனை எடுத்து பார்வதி இறைவனை குளிர்விக்கிறார்,அவருக்கு பூசையும் செய்கிறார். தென்கங்காபுரீஸ்வரராக இவ்விடத்தில் வைத்து பூசித்த தலம் இதுவாகும். ஒரு முறை நடு நாட்டில் பெரும் வியாதி பரவ மன்னன் தனது மருத்துவர்களை ஆலோசனை கேட்க இந்த அறந்தாங்கி நல்லூரில் உள்ள மூலிகைகளை பறித்து வந்து புடம் செய்து மருந்துகள் தயாரிக்க வேண்டும் என்றனர். மன்னனும் பரிவாரங்களுடன் வந்து மூலிகை வனத்தினை தோண்ட லிங்கம் வெளிப்படுகிறது அதனை சுற்றி பெரும் கோயிலமைத்து வழிபட்டான் இக்கோயிலை பல முனிவர்களும் வந்திருந்து வழிபட்டனர் என்பதன் சாட்சியாக சந்நியாசிபேட்டை என்ற ஊர் அருகில் உள்ளது. இறைவன்- தென்கங்காபுரிஸ்வரர் இறைவி- பிரகன் நாயகி இக்கோயிலை கண்ணன் சாமிகள் எனும் முதியவர் பல வருடங்களாக பராமரிக்கிறார். இங்கேயே தனித்து வாழ்கிறார், துணைக்கு இரு நாய்களுடன்.. தனது உழைப்பு, பொருள் அனைத்துமே இந்த இறைவனுக்கே என வாழும் இவருக்கு ஒரே ஆசை தான் இறப்பதற்குள் இதனை அனைத்து அம்சங்களுடன் கூடிய அழகிய கோயிலாக காணவேண்டும் என்பதே முகநூல் நண்பர்கள் இதனை சிரமேற்கொண்டு முடிக்கவேண்டுகிறேன். பொன்னளிக்க இயலாதவர்கள் பொருளளியுங்கள் , அதுவும் இயலாதவர்கள் கோயிலுக்கு வந்து செல்லுங்கள்… # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சின்னநரிமேடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி