அருள்மிகு திருவேலும்கொண்டேஸ்வரன் திருக்கோயில், கள்ளிகுடி
முகவரி
அருள்மிகு திருவேலும்கொண்டேஸ்வரன் திருக்கோயில், கள்ளிகுடி, சிவகங்கை மாவட்டம் – 630108
இறைவன்
இறைவன்: திருவேலும்கொண்டேஸ்வரன்
அறிமுகம்
திருவேலும்கொண்டேஸ்வரன் கோயில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கள்ளிகுடி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கறிவேலம் செடிகளுக்கு நடுவே இக்கோயில் முற்றிலுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இங்குள்ள இறைவனை திருவேலும்கொண்டேஸ்வரன் என்று அழைக்கிறார்கள். கோவிலில் அனைத்து இடங்களிலும் செடி கொடிகள் முளைத்துள்ளன. மேற்கூரை, விமானம் ஏதுமின்றி, மரங்களின் நிழலில் இறைவன் காட்சியளிக்கிறார். நந்தித்தேவர் கோவிலுக்கு வெளியே கல் மீது அமர்ந்து இறைவனின் கருவறை பார்த்தவாறு உள்ளார். விநாயகர் வெயிலின் சூடு தாங்க முடியாமல் அருகில் மரத்தில் காணப்படுகிறார். கோவிலை சுற்றி கோயிலின் தூண்கள் சிதறிக்கிடக்கிறது. இறைவி இல்லை. அருகில் உள்ள கிராம மக்கள் விழாக்காலங்களில் மட்டுமே வந்து செல்கின்றனர்.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கள்ளிகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி