அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், இராப்பட்டிச்சரம்
முகவரி
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், இராப்பட்டிச்சரம் மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல் திருவாரூர் மாவட்டம் – 610104
இறைவன்
இறைவன்: சேஷபுரீஸ்வரர் இறைவி : அந்தப்புரநாயகி
அறிமுகம்
திருவாரூர் – குடவாசல் – கும்பகோணம் சாலையிலுள்ள மணக்கால் என்ற ஊருக்கு அருகிலுள்ளது. மணக்காலில் விசாரித்துச் செல்ல வேண்டும். ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மேற்குப் பார்த்த ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் காணப்படுகிறது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இங்கு முன் மண்டபத்தில் ஆறடி உயரத்தில் தட்சிணாமூர்த்தியும், அருகில் சனகாதி முனிவர்களும் தனித்தனியே ஒன்றரையடி உயரத் திருமேனிகளுடன் இருக்கக் காணலாம். கலை நுணுக்கம் மிகுந்த அற்புதமான சிலை வடிவங்கள். கோஷ்ட தேவதையாக இல்லாமல் தட்சிணாமூர்த்தி முன் மண்டபத்திலேயே உள்ளார். மற்றொரு சிறப்பம்சமாக நந்திதேவர் சேஷபுரீசுவரரை நோக்கி அமர்ந்த போதிலும், தட்சிணாமூர்த்தியைப் பார்த்தவாறு தலையைத் திருப்பிக் கொண்டுள்ளார். கருவறையில் மூலவர் சேஷபுரீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சி தருகிறார். லிங்கத்தின் மீது பாம்பு போன்ற தழும்புகள் உள்ளன. இத்தல இறைவனை ஆதிசேஷன் வழிபட்டுள்ளார். ஆகையால் இத்தலம் ஒரு சர்ப்பதோஷ நிவர்த்தித் தலமாக விளங்குகிறது. இத்தலத்தின் மற்றொரு சிறப்பு சுமார் ஐந்தரை அடி உயரமுள்ள பைரவர் திருமேனி மூர்த்தம். இவர் மிகவும் வரப்பிரசாதி. தேய்பிறை அஷ்டமியில் வாழையிலையில் தயிர் சாதமும் வடையும் பைரவருக்கு நிவேதிக்கப்படுகிறது. பங்குனி மாதம் 7-ம் தேதியில் இருந்து 11-ம்தேதி வரை ஐந்து நாட்கள் மாலை 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளிபட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. # “உயர்திரு சேகர் வெங்கடராமன் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
நாட்டுக்கோட்டை நகரத்தார்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணக்கால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி