அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், புளியஞ்சேரி
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், புளியஞ்சேரி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612604 Mob: +91- 9976710296, +91 – 9784912113
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி : காமாக்ஷி அம்பிகா
அறிமுகம்
தமிழக மாநிலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், 27- புளியஞ்சேரி என்ற கிரமத்தில் அமைதுள்ளது ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில். புளியஞ்சேரி கிராமம் முடிகொண்டான் ஆற்றுக்கு அருகிலும் 120 வீடுகளை கொண்ட சிற்றூராகும். ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பெண்மணிகள் பொருள் உதவியின் மூலம் கிராமக் கோவிலாக கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவானை சமேத சுப்ரமணிய ஸ்வாமி , ஸ்ரீ சண்டிகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி , சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகள் தனியாக அமைக்கப்பட்டு கட்டப்பட்டது. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் பழுதடைந்து , கோவிலின் மேற்கூரை ஸ்வாமியின் மேல் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக , கிராம மக்கள் ஒன்றுகூடி, நிதி வசூல் செய்து தனியாக தகரஷெட் அமைத்து , அதில் பாலாலயம் செய்து அணைத்து ஸ்வாமிகளையும் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. கிராம மக்கள் மூலம் நிதி வசூல் செய்யப்பட்டு, அதை அர்ச்சகருக்கு மாத சம்பளமாக கொடுத்து பூஜை நடைபெற்று வருகிறது .
புராண முக்கியத்துவம்
தற்போது ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலை புதிதாக அதற்கான சந்நிதிகளை கட்டி கோவில் திருப்பணி செய்யவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன் முதல் பகுதியாக விநாயகர் சந்நிதி திருப்பணியை கிராம மக்களின் சுயநிதி திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருப்பணிக்கு மொத்தம் 25 லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சிறிய கிராமம் என்பதால், திருப்பணியை முடிக்க தேவைப்படும் நிதியை கிராம மக்களின் உதவியை மட்டும் வைத்து திருப்பணியை முடிப்பதென்பது இயலாத காரியமாக உள்ளது. கோவில் திருப்பணிக்கு செய்யக்கூடிய தர்மத்திற்கு ஈடு இணை இல்லை என்பது வேதவாக்கு, ஆதலால் இதனை படிக்கும் மெய்ப்பண்பர்கள், இந்த ஊரில் வாழ்ந்து தற்போது வேறு ஊர்களில் வசித்து வரும் வாரிசுகள், மற்றும் அணைத்து நல்ல உள்ளங்களும் முன்வந்து இந்த திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து இறை பணியாற்றி சிவபெருமானின் நல் அருளை பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
சிறப்பு அம்சங்கள்
புளியஞ்சேரி கிரமத்தில் ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலும், ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி திருக்கோவிலும் பக்கத்து பக்கத்தில் அமைந்துள்ளது. இது வேறு எந்த கிராமத்திலும் காண முடியாத சிறப்பாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிலாவடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி