அருள்மிகு காசி விசாலாட்சி திருக்கோவில், உத்தரப் பிரதேசம்
முகவரி
அருள்மிகு காசி விசாலாட்சி திருக்கோவில், வாரணாசி, உத்தரப் பிரதேசம் – 221001
இறைவன்
சக்தி: விசாலாட்சி, பைரவர்: கால பைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: காற்சிலம்புகள்
அறிமுகம்
காசி விசாலாட்சி கோயில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்த வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது. சதி தேவியின் காதணிகள் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாக கருதப்படுகிறது. முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இருதேவியர்களும் வேறுபட்டு காட்சியளிக்கின்றனர்.
புராண முக்கியத்துவம்
தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை விசாலாக்ஷி. சாந்த வடிவத்தோடு எட்டு திக்குகளிலும் உள்ளோரால் பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில், அன்னை விசாலாக்ஷி எனப்படும் மணி கர்ணிகா பீடத்தில் அமர்ந்து, அழகுற அருள்பாலிக்கிறாள். தன்னை அன்போடு வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றுகிறாள் அந்த அம்மன். நவராத்திரியின் போது 9 நாட்களும் நவதுர்க்காவடிவில் தோன்றும் தேவியானவள், அப்போது வேண்டுபவர்களுக்கு வேண்டியதை தருகிறாள். இந்த முக்தி தலத்தில் வந்து உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள். ஆன்மா பிரியும் தருணம் அவர்களை விசாலாக்ஷி தன் மடி மீது கிடத்திக் கொள்வதாகவும், விஸ்வநாதர் அவர்களது காதில் ஸ்ரீ இராம நாமத்தை உபதேசிப்பதாகவும் நம்பப்படுகிறது. சக்திபீடத்தில் கங்கை கரையோரத்தில், நீராடுவதற்கென்று 64 படித்துறைகள் தீர்த்தக்கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மணிகர்ணிகா காட் என்ற படித்துறையில்அம்மன் அருட்பாலிப்பதால் இது மணிகர்ணிகா பீடம் என்று அழைக்கப்படுகிறது.
நம்பிக்கைகள்
இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
சிறப்பு அம்சங்கள்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் காதணிகள் இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
நவராத்திரி, விஜயதசமி, கஜலி தீஜ் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வாரணாசி
அருகிலுள்ள இரயில் நிலையம்
வாரணாசி
அருகிலுள்ள விமான நிலையம்
வாரணாசி