அருள்மிகு உமா தேவி சக்திப்பீடக் கோவில், பிருந்தாவன்
முகவரி
அருள்மிகு உமா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் பக்திவேந்த சுவாமி மார்க், கோதா விஹார், பிருந்தாவன், உத்தரபிரதேசம் 281121
இறைவன்
சக்தி: உமா, பைரவர்: பூதேசர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: கேஸ ஜலா (தலை முடியில் அணியும் அணிகலன்)
அறிமுகம்
பிருந்தாவனம் காத்யாயினி சக்தி பீடக் கோவில் கோதவிஹர், பிருந்தாவன் மாவட்டம், உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான காத்யாயினி சக்தி பீடம், உமாசக்திபீடம் என்றும் அழைக்கப்படும். பண்டைய காலங்களில் இங்கு இருந்த துளசி தோப்பு பெயரையே இந்த நகரத்திற்க்கு பெயரிடப்பட்டது. துளசிக்கு மற்றொன்று விருந்தா. விருந்தாவனம் புகழ்பெற்ற புனித யாத்திரை தளமாகும்.
புராண முக்கியத்துவம்
இந்த கோயில் பார்வதி தேவிக்கு, அதாவது காத்யாயினி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கட்டமைப்பு 1923 ஆம் ஆண்டில் யோகிராஜ் சுவாமி கேஷ்வானந்த் பிரமாச்சாரி அவர்களால் கட்டப்பட்டது. இங்கே வழிபாட்டு மூர்த்தங்களாக உமா தேவியும், பூதேசராக சிவனும் உள்ளார். இந்த கோவிலில் தேவியின் ஒரு வாள் உள்ளது, இது பிரபலமாக உச்சால்சந்திரஹாஸ் என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணரை தங்கள் துணையாகப் பெற மாதா காத்யாயினி யை வணங்குகிறார்கள். தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் தலை முடியில் அணியும் அணிகலன் இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
கிருஷ்ண ஜெயந்தி, காத்யாயணிவிரதம், நவராத்திரி, துர்கா பூஜை, தீபாவளி ஆகியவை உமா சக்தி பீடத்தில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகள்.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிருந்தாவன்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பிருந்தாவன்
அருகிலுள்ள விமான நிலையம்
ஆக்ரா