அருள்மிகு உமாபதீஸ்வரர் சிவன் கோயில், சாத்தனூர்
முகவரி
அருள்மிகு உமாபதீஸ்வரர் சிவன் கோயில், சாத்தனூர், பொன்னமராவதி, புதுக்கோட்டை – 622002
இறைவன்
இறைவன்: உமாபதீஸ்வரர்
அறிமுகம்
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் இருக்கிறது சாத்தனூர் கிராமம். இங்கு வயல்வெளிகளுக்கு நடுவே மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட உமாபதீஸ்வரர் கோயில் இருக்கிறது. ஒரு காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன், வீர பாண்டியன் ஆகியோர்களால் வணங்கப்பட்டு நிவந்தம் கொடுக்கப்பட்ட புகழ்பெற்ற கோயில் இது. இப்போது எந்தவிதமான பராமரிப்புமின்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக வழிபாடின்றி இருக்கிறது. கோயிலுக்கு யாரும் செல்வதுகூட இல்லை. புதர் மண்டிக் கிடக்கிறது. கருவறைக்கு மேலே ஆலமரம் ஒன்று வளர்ந்திருக்கிறது. ஆலமரத்தின் வயது எப்படியும் நூறு ஆண்டுகளைத் தாண்டும். இப்போது கருவறையை ஆலமரம் தங்கியிருக்கிறதா அல்லது ஆலமரத்தைக் கருவறை தாங்குகிறதா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஆலமரம் மிகப்பெரியதாக வளர்ந்துவிட்டது. ஆலமரத்திலிருந்து உதிரும் இலைகளில் சிவ லிங்கமே மூழ்கிவிட்டது. மிகப்பெரிய கற்றளியான இதில் பழைமையான கொற்றவை, விநாயகர், தட்சிணாமூர்த்தி சிலைகள் கேட்பாரற்று கோயிலுக்கு வெளியே கிடக்கின்றன. கோயில் பக்கம் யாரும் செல்வதில்லை என்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்தச் சிலைகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரசமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி