அருள்மிகு அகணி காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி
முகவரி
அருள்மிகு அகணி காசிவிஸ்வநாதர் திருக்கோயில், அகணி, சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 116
இறைவன்
இறைவன்: காசி விஸ்வநாதர்
அறிமுகம்
சீர்காழி – கொண்டல் சாலையில் ஐந்தாவது கிமி-ல் உள்ளது அகணி. இங்கு இரு சிவன்கோயில்கள் உள்ளன. ஒன்று பார்வதீஸ்வரர் மற்றொன்று இப்போது நாம் காணும் காசிவிஸ்வநாதர் இந்த காசி விஸ்வநாதர் பெரிய அழகிய குளத்தின் கரையில் மேற்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளார். அவருக்கு எதிரில் பழம்பெருமை மாறாது நாட்டு ஓடுகள் வேயப்பட்ட கூரை உள்ளது. அதில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். விநாயகருக்கு கிழக்கு நோக்கிய தனி கோயில் தென்மேற்கில் உள்ளது. வேறு சன்னதிகள் ஏதும் இல்லை. ஓட்டு மண்டபத்தில் தாமரை பீடத்தின் மேல் ஒரு சிலை போன்ற ஒன்றுள்ளது அது என்ன என தெரியவில்லை. போதிய பராமரிப்பு, இன்றி மரங்கள் விமானத்தின் மேல் முளைத்து நிற்கின்றன. சரியான பூஜை, இன்றி ஒரு காலபூஜைக்கு மட்டும் அர்ச்சகர் வந்து செல்வதாக தெரிகிறது. ஆற்ற அருநோய் மிகு அவனி மழையின்றிப் போற்றரும் மன்னரும் போர்வலி குன்னுவர் கூற்றுதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே! முன்னவனார் கோயில் பூசைகள் மூட்டிடின் மன்னர்க்குத் தீங்குள மாரிவளம் குன்னும் கன்னங்களவு மிகுந்திடும் காசினியில் என்னரு நந்தி எடுத்துரைத்தானே! – திருமூலர். நித்தம் ஒரு சிவலிங்க வழிபாடு செய்ய வேண்டுமென உறுதி கொள்வோம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அகணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி