அரிட்டாபட்டி சிவன் குடைவரைக்கோயில், மதுரை
முகவரி
அரிட்டாபட்டி சிவன் குடைவரைக்கோயில், அரிட்டாபட்டி, மதுரை மாவட்டம்- 625106
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
அரிட்டாபட்டி மலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளதும் பெரும்பகுதி கல்லால் ஆனதுமான ஒரு மலைக் குன்று ஆகும். மதுரைக்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலையை திருப்பிணையன் மலை என்று சமணக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சமணர் காலக் குகைகள் மற்றும் பாண்டியர் காலக் குடைவரை கோவில்கள் இங்கு அமைந்துள்ளது. மலையைக் குடைந்து செய்யப்பட குடைவரை கோவில் ஒன்றும் இந்த மலையில் உள்ளது. கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் குடைவரைக் கோயில், தற்போது தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் வாயிலில் துவாரகபாலகர்களும் , குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது. இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் நீர்ச்சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச்சுனை நீர் என அழைக்கபடுகிறது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரிட்டாபட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை