அம்பல் சட்டநாதர் கோயில், திருவாரூர்
முகவரி :
அம்பல் சட்டநாதர் ஆபத்தோத்தாரனர் கோயில்,
அம்பல், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609704.
இறைவன்:
ஆபத்தோத்தாரனர்
இறைவி:
அமிர்தவல்லி
அறிமுகம்:
மயிலாடுதுறை- பூந்தோட்டம் அம்பல் என 23கிமீ ல் இவ்வூரை அடையலாம். பாடல் பெற்ற அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் கிழக்கில் அரைகிமீ தூரத்தில் உள்ளது இந்த கோயில். இறைவன் ஆபத்தோத்தாரனர் இறைவி அமிர்தவல்லி கிழக்கு நோக்கிய இறைவன் இறைவி தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் முன்னர் அழகான கூம்பு வடிவ மண்டபங்கள் பார்க்க அழகாகஉள்ளன. அதன் வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. இறைவன் சன்னதியின் தென்புறம் சட்டநாதர் சன்னதி உள்ளது. விநாயகர் முருகன் மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன. பழமையான கோயில், சட்டநாதர் உண்டாக்கிய சூலதீர்த்தம் கிணறு வடிவில் உள்ளது. சப்தகன்னிகள் சன்னதியும் உள்ளது. இந்த தீர்த்தத்தில் குளித்தால் குட்டநோய் தொழுநோய் போன்ற நோய்கள் குணமாகும் என அம்பர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அம்பல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நன்னிலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி